கணவனால் கடத்தப்பட்ட பெண்... நண்பனுடன் சேர்ந்து வெறிச்செயல்!! சிக்கிய சிசிடிவி காட்சிகள்!

20 வருடமாக கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்று வந்த பெண் கடத்தி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கணவனும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மனைவியை தீ வைத்து கொளுத்தும் பொது பதிவான சிசிடிவி காட்சிகள் சிக்கியதால் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Husband killed his wife at Dharmapuri

20 வருடமாக கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்று வந்த பெண் கடத்தி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கணவனும் அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மனைவியை தீ வைத்து கொளுத்தும் பொது பதிவான சிசிடிவி காட்சிகள் சிக்கியதால் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தீ குண்டு பகுதியில் கடந்த மாதம் 28ந்தேதி எரிந்த நிலையில் ஒரு பெண் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து, காரிமங்கலம் தனிப்படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில்,  அந்த இருட்டு நேரத்தில் தீவைத்து எரிக்கும் காட்சி தொலை தூரத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதனை வைத்து அந்த நேரத்தில் அந்த பகுதிக்கு சென்ற கார் ஒன்றை போலீசார் அடையாளம் கண்டனர்.

அந்த காரின் பதிவு எண்ணை வைத்து கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த நேனனங்கலா பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவரை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

லோகேஷ், தனது மனைவி கவுரம்மாவுக்கு குழந்தை இல்லாததை காரணம் காட்டி கடந்த 20வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துள்ளார். விவாகரத்துக்குப் பின்பு மாதம்தோறும் கவுரம்மாவிற்கு குறிப்பிட்ட அளவு ஜீவனாம்ச பணத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஜீவனாம்சம் கொடுத்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால்அவரால் ஜீவ்னாம்சம் கொடுப்பதை நிறுத்தியுள்ளார் லோகேஷ். ஜீவனாம்சம் கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை அவர் நாடியதால் சமாதானப்படுத்திய லோகேஷ் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று முழு தொகையும் செட்டில் செய்வதாக கூறி உள்ளார்.

சம்பவத்தன்று பணத்தை தருவதாக தனிமையான இடத்திற்கு மனைவி கவுரம்மாவை அழைத்துச்சென்று தலையில் பலமாக தாக்கி கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு காரிமங்கலம் தீகுண்டு என்ற பகுதியில் வீசி பின் சாக்குமூட்டையுடன் சடலத்திதை  தீவைத்து எரித்து விட்டு காரில் தப்பிச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த இந்த கொடூர கொலை கணவன் லோகேஷ் மற்றும் அவரது கூட்டாளி அனுமந்தப்பா ஆகியோரை கைது செய்த காரிமங்கலம் போலீஸார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios