தனது மனைவி சந்தோஷமாக இருந்ததால் 2 கத்திகளால் 59 முறை, கொடூரமாக குத்திக் கொன்ற கணவனுக்கு நீதிமன்றம் அதிகபட்ச தண்டனையாக 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த லாரன்ஸ் பிராண்ட்,  இந்தியப் பெண்ணான 41 வயது ஏஞ்சலா மிட்டலை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கருதது வேறுபாடுகள் முற்றிய நிலையில் தொடர்ந்து குடும்பத்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு இருவருக்கும் சண்டை சச்சரவு முற்றிய நிலையில் லாரன்ஸ் ஏஞ்சலாவை சரமாரியாக, இரண்டுக் கத்திகளால் குத்தியதில் ஏஞ்செலா உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கணவர் லாரன்ஸ் கோபத்தில் ஒருகத்தியால் குத்தியதில், அந்தக் கத்தியே உடைந்து விட சமையலறையில் இருந்து இன்னொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் மீண்டும் குத்தியது தெரியவந்தது.

கொடூரமாக கொல்லப்பட்ட அந்தப் பெண், அவ்வளவு ஆவேசத்துடன் கொடூரமாகவே குத்தியும் அந்தப் பெண் உயிருக்குப் போராடியதும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மிகவும் கொடூரமான கொலை என்று தெரிவித்து ஆயுள் தண்டனை விதித்தார். மனைவி மிகவும் சந்தேகப்பட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக லாரன்ஸ் கூறியுள்ளார். பிரிட்டனில் ஆயுள் தண்டனை என்பது 16 ஆண்டுகள் 8 மாதங்கள் ஆகும் என கூறியுள்ளனர்.