தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இ.சத்திரப்பட்டி கிராமத்தினை சேர்ந்த மருதையா என்பவரது மகன் மாரியப்பன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் கோவில்பட்டி புதுக்கிராமத்தினை சண்முகப்பிரியாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் கல்யாணம் ஆன சில மாதங்கள் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.  தற்போது சண்முகப்பிரியா கர்பமாக உள்ளார். 

இந்நிலையில் இன்று காலையில் வெகுநேரமாகியும் மாரியப்பனும், அவரது மனைவியும் வீட்டை வீட்டு வெளிய வரவில்லை என்பதால், அருகில் வசிக்கும் மாரியப்பன் சகோதரி காளியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். 

வீடு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. இதனை தொடர்ந்து தனது தம்பி பெயரை சொல்லி அழைத்துள்ளார். வெகுநேரம் ஆகியும் பதில் வராததால் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டின் ஜன்னலை உடைத்து பார்த்திருக்கின்றனர். மாரியப்பன் மற்றும் சண்முகப்பிரியா இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் முதல் அறையில் அரை மயக்கத்தில் காயங்களுடன் மாரியப்பன் கிடந்துள்ளார். 

உள்ளே இருக்கும் படுக்கை அறையில் சண்முகப்பிரியா ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையெடுத்து போலீசார் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சண்முகப்பிரியா சடலத்தையும் மீட்டு பிரேதப பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதனையடுத்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அரை மயக்கத்தில் இருந்த மாரியப்பனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில்  தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல் நலம் தேறி வரும்  அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது மனைவி தன்னை வேலைக்கு போகச் சொல்லி தொந்தரவு கொடுத்தவுகம், நேற்று இரவும் இது தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதால் தகராறில் கத்தியால் தனது மனைவி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள தன்னுடைய கழுத்து, கைகளில் கத்தியால் குத்தியதில் மயக்கமடைந்து விழுந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மாரியப்பன் சரியாக வேலைக்கு செல்லாமல் வரதட்சணையாக மனைவிக்கு போட்ட நகையை அடகு வைத்தும், விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளதாகவும், இதைத் தட்டிக் கேட்ட கர்பமாக உள்ள மனைவியை கொன்றதாக  உறவினர்கள் கூறுகிறார்கள்.