மீஞ்சூரில் கணவன் மனைவி சண்டையில், ரவிச்சந்திரன் என்பவர் தனது மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்ததில் பலத்த , படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பலனின்றி மரணமடைந்தார். கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

மீஞ்சூரைச் சேர்ந்த ரவிச்சந்திரனுக்கு தனது மகள் ராதாவை திருமணம் செய்து கொடுத்தார் ராமமூர்த்தி. மகிழ்ச்சியாக நடந்துகொண்டிருந்த குடும்பத்தில் திடீரென்று சந்தேகம் எனும் புயல் வீசியது. மனைவி மீது சந்தேகப்பட்டு தினசரியும் அடித்து சண்டை போடுவாராம் கணவர் ரவிச்சந்திரன்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே நடந்த ஆரம்பித்த சண்டை  முற்றி ரத்தகாயத்தில் முடிந்தது. மனைவி என்று கூட பாராமல் உருட்டுக்கட்டையால் அடித்ததில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். ராதாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரது அப்பாவிற்கு தகவல் கொடுத்தனர். இதற்க்கு முன்பாக பலத்த காயங்களுடன் துடிதுடித்துக்கொண்டிருந்த ராதாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். 

இதனைத் தொடர்ந்து ராதாவின் அப்பா மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ராதா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  

இந்நிலையில் கடந்த வாரத்தில் வழக்கம் போல இருவருக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் ரவிச்சந்திரன் ராதாவை உருட்டுக்கட்டையால் நடுமண்டையில் கொடூரமாக தாக்கியதும், அதனால் ராதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். துருதிர்ஷ்டவசமாக இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீஞ்சூர் காவல்துறையினர் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.