கள்ளக்காதலுக்கு இடையூறு; எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட கணவன்: இருவர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவனை கொலை செய்த மனைவி மற்றும் ஆண் நண்பரை 10 மணி நேரத்தில் கைது செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

husband killed by wife and her boyfriend for illegal relationship in chengalpattu district

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் கிராம ஏரிக்கரையில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும் ஆங்காங்கே சில எலும்பு துண்டுகளும் சிதறிக் கிடந்துள்ளன. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அப்பகுதியில் சிதறிக் கிடந்த மனிதனின் மண்டை ஓடு, எலும்புக் கூடுகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பினர்.

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வேண்டுமா? இன்றே கடைசி வாய்ப்பு

இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி போது வெள்ளப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த துரைபாபு என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த ஒரு குடும்பம் மாயமானதைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது மாயமான குடும்பத்தின் உறுப்பினரான சித்ரா என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்: தட்டி கேட்ட உறவினர்கள் மீது தாக்குதல்

விசாரணையில், தாம் சக்திவேல் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததை எனது கணவர் சந்திரன் நேரில் பார்த்துவிட்டு எங்களை தாக்கத் தொடங்கினார். அப்போது அருகில் இருந்த கட்டையை கொண்டு நானும், சக்திவேலும் சேர்ந்து சந்திரனை கொலை செய்து அருகில் புதைத்துவிட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சித்ராவையும், சக்திவேலுவையும் கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எலும்புக்கூடுகள் கிடைத்த 10 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios