Asianet News TamilAsianet News Tamil

முத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்த இளம்பெண்.... அடித்து உயிரோடு எரித்துக் கொலை!!குடும்பத்தினர் வெறிச்செயல்!!

முத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்த இளம்பெண்ணை கணவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

Husband, In-Laws Burn UP Woman Alive After Cops Refuse To File Triple Talaq Case
Author
Uttar Pradesh, First Published Aug 19, 2019, 4:34 PM IST

முத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்த இளம்பெண்ணை கணவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் சிரவங்கி மாவட்டம் கட்ரா கிராமத்தைச் சேர்ந்த நபீஸ் மும்பையில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி சயீதா. இவர்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆவேசம் அடைந்த நபீஸ் போனில் மனைவியை அழைத்து முத்தலாக் முறையில் விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சயீதா  பிங்கபுர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் அவரது புகாரை விசாரிக்கவில்லை.

தன் மீது போலீசில் புகார் கொடுத்ததால் மனைவி மீது நபீஸ் மேலும் ஆத்திரம் அடைந்த கணவர் . மும்பையில் இருந்து ஊர் திரும்பியதும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சயீதா வோடு தகராறு செய்தார். அப்போது நபீசின் தந்தை, தாய், சகோதரிகள் மற்றும் உறவினர் 3 பேர் என கும்பலாக அங்கு சென்றுள்ளனர்.

அப்போது, நபீஸ் தனது மனைவியின் தலை முடியை பிடித்து இழுத்து, அடித்து உதைத்து தாக்கினார். அப்போது நபீசின் தங்கை சயீதா மீது மண்எண்ணையை ஊற்றினர். நபீசின் தந்தை-தாய் இருவரும் சயீதா மீது தீ வைத்துள்ளனர். இவற்றை சயீதாவின் மகள் நேரில் பார்த்து அலறி துடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். அவரது சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு ஓடிச் சென்றனர். அதற்குள் சயீதா துடிதுடித்து தீயில் கருகி உயிரிழந்து விட்டார்.

கொலை குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சயீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்  நபீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை, வரதட்சணை கேட்டு வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ஸ்ரீவஸ்தவா கூறினார். 

மேலும் முத்தலாக் கூறியது தொடர்பாக சயீதா முதலில் கொடுத்த புகாரை போலீசார் ஏன் சரியான முறையில் விசாரணை செய்யவில்லை? என்பது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தலாக் புகார் கூறிய பெண் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios