Asianet News TamilAsianet News Tamil

கணவரின் கள்ளக்காதலி மகளை கொடூரமாக கொலை செய்த பெண்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கருமாண்டி செல்லிபாளையம் அங்கப்பாவீதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவருடைய மனைவி கனகா இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் கமலகண்ணன் என்பவர் தனது மனைவி வனிதாவுடன்  வசித்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் கனகாவும், வனிதாவும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.

husband girlfriend daughter murder...Court sentenced to life imprisonment
Author
Erode, First Published May 17, 2022, 11:05 AM IST

பெருந்துறை அருகே கடந்த 2018ம் ஆண்டு 7 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் வனிதா என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கருமாண்டி செல்லிபாளையம் அங்கப்பாவீதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவருடைய மனைவி கனகா இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் கமலகண்ணன் என்பவர் தனது மனைவி வனிதாவுடன்  வசித்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் கனகாவும், வனிதாவும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.

husband girlfriend daughter murder...Court sentenced to life imprisonment

இந்நிலையில் கனகாவுக்கும், வனிதாவின் கணவர் கமலகண்ணனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கனகாவின் மகள் கனியை கமலகண்ணன் தனது மகள்போல் கவனித்து வந்தார். அந்த சிறுமிக்கு படிப்பு செலவில் இருந்து துணிகள் வாங்கி கொடுப்பது முதல் பல்வேறு செலவுகளை கமலகண்ணன் செய்து வந்தார். இதனால் வனிதாவுக்கும், அவரது கணவர் கமலகண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 12-ம் தேதி காலையில் சண்முகநாதன் மற்றும் கனகாவும் வேலைக்கு சென்றுள்ளனர். சிறுமி கனி மட்டும் வீட்டில் தனியார் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி சிறுமியை கழுத்தை நெறித்து வனிதா கொலை செய்தார். பிறகு கனி  தவறி கீழே விழுந்து உயிரிழந்தது போல நாடகமாடியுள்ளார். 

husband girlfriend daughter murder...Court sentenced to life imprisonment

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கனியை வனிதா கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து, வனிதாவை போலீசார் கைது செய்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், தீர்ப்பில் சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக வனிதாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலைக்கான தடயங்களை மறைத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- வாயில் துணியை வைத்து 11ம் வகுப்பு மாணவி கதற கதற பலாத்காரம்.. புருஷனுக்காக அத்தை செய்த வேலையை பார்த்தீங்களா?

இதையும் படிங்க;- என் புருஷன் மட்டையாயிட்டா சீக்கிரம் வாடா.. இறுதியில் கள்ளக்காதலனும், மனைவியும் என்ன செய்தாங்க தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios