கணவர் இறந்த சோகத்தில்  இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை ஆழ்வார்திருநகரைச் சேர்ந்தவர்  சண்முகம் (வயது 36)  இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 32)  இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு சண்முகம் திடீரென தற்கொலை செய்து கொண்டார். 

அவரின் இழப்பு குடும்பத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  அவருக்கு காரியம் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் கலந்து கொள்ள உற்றார் உறவினர்,  நண்பர்கள் ,  அவரது வீட்டிற்கு வந்தனர்.   காரியம் முடிந்த பின்னர் அனைவரும் கணவரை இழந்து வாடும் ராஜேஸ்வரிக்கும் அவரது மகன்களுக்கும் ஆறுதல் கூறி விட்டு ஊருக்கு புறப்பட்டனர். இந்நிலையில்  கணவர் இல்லாததால் வாழ்க்கையே வெறுமையாகி விட்டது என ராஜேஸ்வரி புலம்பி வந்தார்.  எந்த வேலையும் இல்லாத நிலையில்,  இரண்டு பெண் பிள்ளைகளை எப்படி வளர்த்து,  கரைசேர்ப்பேன் என்று அவர் அழுது புலம்பி வந்துள்ளார்.  கணவர் இறந்த துக்கம் தாளாமல் தேம்பி அழுது கொண்டிருந்த ராஜேஸ்வரி, இரவு அவரது இரண்டு மகன்கள் மட்டும் வீட்டில் உடன் இருந்த நிலையில்,  அவர்களுக்கு இரவு உணவு  கொடுத்து தூங்க  வைத்தார். 

மகள்கள் இருவரும் தூங்கிய நிலையில், பின்னர் பொழுது விடிந்து,  அவர்கள்,  எழுந்து பார்த்தபோது தாய் ராஜேஸ்வரி தூக்கில் தொங்கியபடி இருந்ததைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  தாயின் உடலை பார்த்து இரண்டு குழந்தைகளும் கதறி அழுதனர்.  குழந்தைகள் அழுவது கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது.  ராஜேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்தார்.  தாயின் உடலை பார்த்து பிள்ளைகள் அழுவதை கண்டு அக்கம்பக்கத்தினரும் கதறி அழுதனர்.   கணவன் இறந்த துக்கம் தாங்காமல்  இரு மகன்களையும் அனாதைகளாக பரிதவிக்கவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.