குடும்பம் நடத்த வராத மனைவியை கணவனே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வெடிக்காரன்புதூர் நாய்க்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி மரம் அறுக்கும் கூலி வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.  பாலசுப்ரமணிக்கு தினமும் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்குள் தினமும் சண்டை நடந்துள்ளது. வேலைக்கு போகாமல் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் இருந்து பணம் கொண்டு வரும்படியும் அடிக்கடி மனைவியை அடித்துச் நச்சரிப்பாராம்.

கணவரின் தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாத தங்கமணி அடிக்கடி பெற்றோர் வீட்டுக்குச் சென்று விடுவார். ஆனாலும் அவரது வீட்டிற்க்கே சென்று  தகராறு செய்துள்ளார். 

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தங்கமணி, மல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  போலீசார் அவர்களை நேரில் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாள்களுக்கு முன் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதை அடுத்து, தங்கமணி தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மனவிவியை பிரிந்த கணவன் தனிமையில் தவித்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை, மனைவியைத் தேடி மாமனார் வீட்டுக்குச் சென்ற பாலசுப்ரமணி, குடும்பம் நடத்த வருமாறு மனைவி தங்கணியை கெஞ்சிக் கூத்தாடியுள்ளார்.

ஆனால் மனைவி தங்கமணியோ, கணவனின் பேச்சை நம்ப மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்ரமணி, வீட்டில் இருந்த அரிவாளால் தங்கமணியின் கழுத்தை அறுத்துள்ளார். உயிருக்குப் போராடிய நிலையில் தங்கமணி ரத்தம் சொட்ட சொட்ட அலறியடித்து வீட்டிலிருந்து  வெளியே ஓடி வந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில், வரும் வழியிலேயே தங்கமணி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த மல்லூர் காவல்துறையினர் தங்கமணியின் உடலை மீட்டு, பிரேதப பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய கணவன் பாலசுப்ரமணியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.