சொத்துக்காக மனைவியை நடு ரோட்டில் நிர்வாணப்படுத்தி கணவனும் மாமியாரும் அடித்து துன்புறுத்தியிள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்துக்காக மனைவியை நடு ரோட்டில் நிர்வாணப்படுத்தி கணவனும் மாமியாரும் அடித்து துன்புறுத்தியிள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தது குற்றங்கள் குறைந்தபாடில்லை, காதலிப்பதாக நடித்து கற்பழித்து ஏமாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது போன்ற எண்ணற்ற கொடுமைகள் பெண்களுக்கு எதிராக நடந்து வருகிறது. இந்த வரிசையில் சொத்தை எழுதி தர மறுத்த மனைவியை கணவன் நடு ரோட்டில் நிர்வாணப்படுத்தி அடித்து அவமானப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த கொடூரம் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஷிவ்புரியில் ஹரிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சவிதா கேவத், இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு சவிதா தனது பெற்றோர்களின் உதவியுடன் வீட்டு மனை வாங்கினார். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி படிக்கும் போது அது உதவும் என்பதால், அப்போது அந்த இடத்தை விற்கும் வகையில் அவரது பெற்றோர்கள் அதை பத்திரப் பதிவு செய்திருந்தனர். ஆனால் கணவர் மற்றும் அவரது மாமியார் அந்த இடத்தை அபகரிக்க முயற்சித்தனர்.
இதனால் தனது பெயரில் எழுதி வைக்கும்படி கணவர் மனைவியை வற்புறுத்தி வந்தார், கணவர் பெயரில் மாற்றினால் உடனே அதை விற்று விடுவார் என்று அஞ்சிய மனைவி சவிதா அதை கணவன் பெயருக்கு மாற்ற சம்மதிக்கவில்லை, நிலத்தை தன் பெயரில் பதிவு செய்துதர முன்வராத மனைவி மீது கணவன் தாக்குதல் நட்த்தினார் அப்போது அவருடன் சேர்ந்து அவரது தாய் மற்றும் அவரது சகோதரர்கள் ஆகியோர் சேர்ந்து சவிதாவை கடுமையாக தாக்கினர். அவரை கட்டையால் சரமாரியாக அடித்து உதைத்தனர். சவிதாவின் மூன்று வயது மகன் தன் தாயை காப்பாற்றுங்கள் என கதறினான்.

தன் அம்மாவை தாக்கியபாட்டியை அடித்தான், தன் தாயை விட்டு விடுமாறு கதறி அழுதான், கெஞ்சினான் எனினும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. கணவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் சேர்ந்து மனைவியை நடுரோட்டில் நிர்வாணப்படுத்தி தாக்கினார். இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து தாக்கிய கணவன் மற்றும் மாமியார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
