கொடூரமாக பீஸ் பீஸாக வெட்டி சிதைத்த கணவனை கைது செய்த போலீஸ் சந்தியாவின் இடுப்பு, தொடை பகுதியை கண்டுபிடித்தது. இதனையடுத்து சந்தியாவின் தலையை தேடி வருகிறது ஆனால் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் கைது செய்யப்பட்ட கணவனை விசாரித்த அதிகாரி பல தகவல்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அந்த விசாரணை அதிகாரி கூறுகையில்; எனக்கும் எனது மனைவிக்கும்  சுமார்15 வயது, தற்போது எனக்கு 51 வயதாகிவிட்டது. ஆனால் ஏன் மனைவிக்கு  35 வயதுதான். இரண்டு குழந்தைகளை பெற்றாலும், இந்த வயதில் பெண்களுக்கு இயல்பாகவே வரக்கூடிய  ஆசைகள் சந்தியாவுக்கு இருந்தது. இதனால்தான் என்னை பார்த்தால் சந்தியாவுக்கு பிடிக்கவில்லை, என்னை வயதான கிழவனை கட்டி வைத்து விட்டீர்கள்" என அவரது வீட்டில் சொல்லி சண்டைபோட்டுள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் பிறந்துவிட்டாலும், சமீபகாலமாகவே, என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட சந்தியாவிற்கு ஆர்வம் இல்லை. என்னை அறுவறுப்பாக பார்த்தார். 

நான் உறவுக்கு அழைத்தாலும், அழகு கெட்டுவிடும் என்று ஒரு காரணத்தை கூறி, என்னுடன் உடலுறவு வைக்க உடன்படாமல் இருந்தார். இதனால் எனக்கு சந்தியா மீது இன்னும் கோபம் வந்தது. "எல்லாத்துக்கும் காரணம்,  அவளின் அந்த அழகான உடல் அழகுதானே" அதான், சந்தியாவை பார்க்கும்போதெல்லாம்,  ஒரு வித வெறியேறும். இந்த அழகே இல்லாமல் போனால் என்னை யாரும் அறுவெறுப்பாக பார்க்க மாட்டார்கள்தானே என நினைத்தேன். 

இந்நிலையில் கடந்த மாதம் எனக்கும் சந்தியாவுக்கும்  பயங்கர சண்டை வந்தது. இதனால், சில நாட்களில் அவர் வீட்டுக்கே வரவில்லை. தனது ஆண் நண்பரோடு விருப்பம் போல  ஊர் சுற்றினார். அதை கேட்டால், அசிங்கப்படுத்துவாள். எனவேதான், மிக கடுமையான கோபத்தில், சந்தியாவை கொன்றதோடு, பீஸ் பீஸாக வெட்டினேன். இப்போது எனது மனதுக்கு திருப்தியாக உள்ளது. அதனால்தான் என்னால் சிரித்த முகத்தோடு இருக்க முடிகிறது என கணவர் பாலகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில் கூறியதாக  விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.