திண்டுக்கல்லில் வசித்து வரும் தம்பதியினர் சற்குணம் மற்றும் சரண்யா. திருமணமாகி 12 ஆண்டுகள் நிறைவுற்ற இவர்களுக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் சற்குணத்திற்கும் சித்ரா என்ற மற்றொரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. சற்குணம் பெற்ற குழந்தைகளுக்கு கூட எதையும் செய்யாமல், நடு ரோட்டில் விட்டுள்ளார் சற்குணம்.

குடும்பத்தை விட காமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பழகி வந்த சற்குணம் மற்றும் சித்ராவின் கேடு கெட்ட செயலால்,பாதிக்கப்பட்ட மனைவி சரண்யா பலமுறை கணவரிடம் திருந்த சொல்லி கெஞ்சி உள்ளார்.

இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத சற்குணம், கள்ளக்காதலியான சித்ராவை தன் வீட்டிற்கே அழைத்து வந்து, மனைவி சரண்யாவை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சரண்யா, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், அக்கம் பக்கத்தினாரால் சேர்க்கப்பட்டனர். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த போலீசார் சற்குணம் மற்றும் சித்ராவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இருவரும் சரண்யாவை தாக்கிய போது, அருகில் இருந்த மற்றொருவர் எடுத்த வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவே முக்கிய ஆதாரமாக பொலிஸாருக்கு கிடைத்து உள்ளதால், சற்குணத்திடம் விசாரணை தீவிரமாக இருக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.