மனைவியுடன் தாம்பத்ய உறவு கொண்டதை படம் பிடித்து மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்தவர் பெண் டாக்டர் ஷ்யாமளா ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் டாக்டராக வேலை பார்த்து வந்தார். ஷ்யாமளாவுக்கும்  ஆந்திர மாநிலம் சித்தூர் தூர்கா நகரை சேர்ந்த சத்திய நாராயணா என்ற என்ஜினீயர் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டரின் சம்மதத்தோடு கல்யாணம் நடந்தது. 

இருவரும் சித்தூரிலுள்ள சத்தியநாராயணன் வீட்டில் வசித்து வந்தனர். சத்தியநாராயணா தனது மனைவியான பெண் டாக்டருடன் தாம்பத்ய உறவு கொண்டதை அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அவர் இல்லாத நேரத்தில் அதை பார்த்து ரசித்து வந்துள்ளார்.

இதனை ஒருநாள் பெண் டாக்டர் பார்த்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அந்த வீடியோவை செல்போனில் இருந்து அழிக்கும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஆரம்பமானது,  இதில் ஆத்திரமடைந்த சத்தியநாராயணா பெண் டாக்டரை அஸீன்க அசிங்கமாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பெண் டாக்டர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் நடந்ததை சொல்லியுள்ளார். இதையடுத்து அவர்கள் சத்திய நாராயணாவிடம் நடந்தவற்றை மறந்து தனது மகளிடம் தகராறு செய்யாமல் குடும்பம் நடத்து இல்லை என்றால் கல்யாணம் செய்துகொள்ள வரதட்சனையாக கொடுத்த 75 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் அனைத்தையும் கொடு என கூறியுள்ளனர்.

அதற்கு சத்தியநாராயணா எதையும் திருப்பி தர முடியாது மேற்கொண்டு ரூ.10 லட்சம் கொடுத்தால் உனது மகளுடன் குடும்பம் நடத்துவேன் இல்லையென்றால் அவளோடு உல்லாசமாக இருந்த பொது எடுத்த வீடியோவை இன்டர்நெட்டில்  வெளியிடுவேன் என கூறி மிரட்டல் விட்டுள்ளார். இதுகுறித்து பெண் டாக்டர் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா வழக்கு பதிவு செய்து சத்தியநாராயணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.