தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த பேருந்து நடத்துநரை, தம்பியுடன் சேர்ந்து பள்ளி ஆசிரியர் வெட்டிக் கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே கருமாச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியரான இவருக்கு ரேவதி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

ரேவதியும் தனியார் பள்ளியின் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். ரேவதிதினமும் பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் வேலைபார்க்கும் பள்ளிக்கு தினமும் பேருந்தில் சென்று வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற தனியார் பேருந்து நடத்துநர் -  ராஜமுருகன்க்கும் இடையேயான நட்பால், பேருந்தில் சென்று வந்த ரேவதிக்கும் கோவிந்தராஜூக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம்  நாளடைவில் தகாத உறவாக மாறியதாக சொல்லப்படுகிறது. இந்த உறவால் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இவர்களின் அசிங்கமான உராய்வை அறிந்த கணவர் ராஜமுருகன், இரண்டுபேரையும் கண்டித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவர்கள் தனியாக வாழ முயற்சி செய்துள்ளனர். இந்தச் சூழலில் கடந்த 2ஆம் தேதி முதல் ரேவதி, கோவிந்தராஜையும் காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் சார்பில் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை அன்று காலை முதுநகர் மணக்குப்பம் அருகே அடையாளம் தெரியாத நபர் கொடூரமான நிலையில் வெட்டிக் கொல்லப்பட்டு சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்திய போலீசார், அது கோவிந்தராஜ் தான் என்பதை உறுதி செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை ஒருபுறம் சென்று கொண்டிருக்க அன்றைய நாளே ராஜமுருகனும் அவரது தம்பி ராஜசிம்மனும், சிதம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் ரேவதியை கோவிந்தராஜ் அழைத்துக் கொண்டு சென்று தனியாக வாழ முயற்சித்ததே கொலைக்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

ரேவதியை கோவிந்தராஜ் சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும், இதனால் கோபமான ராஜமுருகனும், ராஜ சிம்மனும் அவர்களை கண்டுபிடித்து மீண்டும் ஊருக்கு அழைத்து வந்ததாகவும் தெரிகிறது. ரேவதியை மட்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்த அந்த இருவரும், கோவிந்தராஜை, மணக்குப்பம் பகுதிக்கு அழைத்துச் சென்று வெட்டிக் கொலை செய்து விட்டனர் என்கிறனர் போலீசார்.