பெரம்பலூரில் பிடிபட்ட கஞ்சா கடத்தல் கும்பல் விசாரிக்க சென்றபோது, குற்றவாளியின் அண்ணனுடன் குடும்பம் நடத்தி வந்த திருச்சி எஸ்.ஐ. புவனேஸ்வரி கையும் களவுமாக பிடிபட்டார்.

பெரம்பலூர் அருகே சில தினங்களுக்கு முன் கஞ்சா கடத்தி வந்த காரை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். இதுதொடர்பாக திருச்சி போதை தடுப்பு பிரிவு பெண் எஸ்ஐயிடம் விசாரிக்க அவரது வீட்டுக்கு சென்றபோது ஆந்திரா கஞ்சா கடத்தல் குற்றவாளியின் அண்ணனுடன் எஸ்ஐக்கு கள்ளக்காதல் இருப்பதும், அவர்கள் ஒன்றாக வசித்து வந்ததும் அம்பலமானது.

திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக இருந்தவர் புவனேஸ்வரி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிட மாற்றம் பெற்று சென்றார். அதன் பின்பு போதை தடுப்பு பிரிவில் எஸ்ஐயாக பணியில் உள்ளார். ஆந்திரா கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு வைத்திருந்த எஸ்.ஐ புவனேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். அந்த டாபிக் தான் காவல்துறையில் இப்போ பற்றி எரிகிறது. 

கட்டிய கணவரை விவாகரத்து செய்து, எஸ்ஐ பணிக்கு உடன் இருந்து செலவு செய்த கலெக்டர் அலுவலக ஊழியரை ஏமாற்றியதால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாராம். பின் புறநகரில் எஸ்ஐயுடன் தொடர்பு, அதன்பின் மாநகரில் டிரைவருடன் தொடர்பு, அடுத்து இன்ஸ்பெக்டருடன் தொடர்பு என பட்டியல்கள் நீண்டு கொண்டே போயுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள மிகப்பெரிய கஞ்சா வியாபாரியுடன், இன்ஸ்பெக்டர்களுக்கான அரசு காவலர் குடியிருப்பில் குடியிருந்து கொண்டு குடும்பம் நடத்தியது தற்போது வெட்ட வெளிச்சமானது. 

இதில் காவலர் குடியிருப்பில் இருக்கும் ஆந்திரா வியாபாரி வீட்டிற்கு வந்தால், உடனடியாக அக்கம்பக்கத்தினர் கண்ட்ரோல் அறைக்கு குடும்ப பிரச்னை, ஒரே சண்டையாக உள்ளது என தகவல் தெரிவிப்பார்கள். அதன்பின் போலீசார் சென்றால், ஒன்றும் இல்லை என கூறி சமாளித்து விடுவார்கள். இப்படியே நீடித்த பிரச்சனையால் தற்போது எஸ்.ஐ சஸ்பெண்ட் வரை சென்றுள்ளார். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர்களுக்கான குடியிருப்பில் எப்படி எஸ்.ஐ.,க்கு வீடு ஒதுக்கப்பட்டது என போலீசார் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதற்கு யார் உதவி செய்தது எனவும் கேட்டு அதிர வைக்கிறார்களாம். எஸ்ஐக்கு அப்படி உதவிய செய்த அந்த உதவி கமிஷனர் யார், அவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, இந்த சம்பவம் முழுவதும் மூடி மறைக்கப்படுவதால் போலீஸ் கமிஷனர் தான் இதுகுறித்து தீவிர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.