Asianet News TamilAsianet News Tamil

முகிலன் விரும்பி உறவு கொண்டது எப்படி குற்றமாகும்..? சிக்கலில், சிக்க வைத்த இளம்பெண்..!

என்னை அவரின் மகள் என்று பலரிடம் சொன்னார். ஆனால், மகளுக்கும் மனைவிக்குமான உறவின் வித்தியாசம் முகிலனுக்குத் தெரியாதா?' என கேள்வி கேட்டு வந்தார். 

How is Mukhilan guilty?
Author
Tamil Nadu, First Published Jul 10, 2019, 3:02 PM IST

முகிலனுடன் போராட்டக் களங்களில் பயணித்த குளித்தலையில் வசிக்கும் இளம்பெண் இசை என்கிற ராஜேஸ்வரி, தன் ஃபேஸ்புக் பக்கத்தில், 'முகிலன் என்னைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றி விட்டார். என்னை அவரின் மகள் என்று பலரிடம் சொன்னார். ஆனால், மகளுக்கும் மனைவிக்குமான உறவின் வித்தியாசம் முகிலனுக்குத் தெரியாதா?' என கேள்வி கேட்டு வந்தார். இவர் கொடுத்த பாலியல் வழக்கில் தான் முகிலன் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். How is Mukhilan guilty?

இந்த விவகாரத்தில் முகிலன் மட்டும் குற்றவாளி அல்ல. அந்தப்பெண் விருப்பத்திற்கு இணங்கவே உறவு வைத்துக் கொண்டிருக்கிறார் என விவகாரம் திரும்பி வருகிறது. இதுகுறித்து சிலம்புசெல்வர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், ’’நான் இங்கு முகிலன் தவறு செய்தார் என்பதை ஏற்றுக் கொண்டே விவாதிக்கிறேன். இங்கு முகிலனை விமர்சிப்பவர்கள் எங்கு நழுவுகிறார்கள். முதலில் முகிலனை ஒழுங்குபடுத்தும் வேலையில் துவங்கி இறுதியில் முகிலனுக்கு எதிராக வந்து நிற்கின்றனர். தவறு என்று பார்ப்பவர்கள் இருவர் மீதும் அல்லவா பார்க்க வேண்டும். நடுநிலை போல் காட்டிக் கொண்டு ஒருதலை சார்பாக அல்லவா நடக்கிறீர்கள்.How is Mukhilan guilty?

சிக்கலில் சம்பந்தப்பட்ட இருவரும் ஏதோ அறியாமல் தவறிழைத்தவர் அல்லர். அறிந்தே செய்தவர்கள். தற்போது முரண்பாடு இருவருக்கும் வந்தவுடன் பெண் கூறுகிறார் அறியாமல் இருந்த என்னை ஏமாற்றி விட்டார் என்று. நடுநிலை என்று பஞ்சாயத்து செய்யச் சென்றவர்கள் ஆமாம் என்று முகிலன் மீது பாய்கின்றனர். இது உண்மையா? அந்தப் பெண் அறியாதவரா? ஆசை வார்த்தைகள் காட்டியவுடன் மயங்குபவரா? முகிலனுக்கு குடும்பம் உள்ளது. குழந்தை உள்ளது என்று தெரிந்தே தான் தவறிழைத்துள்ளார்.
 
இப்போது நேரடியாக கேள்வி வருகிறது பாதிக்கப்பட்ட பெண் victim என்றால் அவர் எதிர்பார்ப்பது என்ன? திருமணம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறாரா? அல்லது தன்னை ஏமாற்றிய கயவனுக்கு தண்டணை வேண்டும் என்று கூறுகிறாரா? அது இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஏமாற்றி விட்டார் என்றால் அது போலீஸ் எப்.ஐஆர் போட எழுதுவதற்கும், கிசுகிசு செய்திக்கும் வேண்டுமானால் பயன்படலாம்.How is Mukhilan guilty?

தன்னை ஏமாற்றினார் என்றால் விரும்பி உறவு கொண்ட இருவருக்குள் எப்படி ஏமாற்றுதல் இருக்க முடியும். அதாவது இங்கு குறிப்பிடுவது பாலியல் உறவுக்குள். அப்படி ஆனால் இங்கு ஏமாற்றுதல் என்பது திருமணம் தொடர்பானதே! அதில் இருவரும் செய்த முடிவு என்ன?

அதைப்பற்றி வெளிப்படையாக அந்தப் பெண் இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால், சிக்கல் எப்படி மடைமாற்றம் செய்யப்படுகிறது பாலியல் ரீதியாக திட்டமிட்டு ஏமாற்றி விட்டார் என்று? திருமணம் பற்றிய முடிவுகளை அந்தப் பெண்ணும் முகிலனும் என்ன பேசி முடிவு எடுத்தனர்? எதுவும் தெரியாது? ஆனால் எந்த சத்தம் காதைக் கிழிக்கிறது ஏமாற்றி விட்டார்! ஏமாற்றி விட்டார்!

ஒருவேளை திருமணம் செய்து கொள்வது என்று இருவருமே முடிவு செய்து இருந்தால் இருவருமே குற்றவாளிகள் என்று ஆகுமே தவிர முகிலன் மட்டுமே ஆக மாட்டார். காரணம் தெரிந்தே இருவரும் பூங்கொடிக்கு துரோகம் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. அதைப் பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. அவர் ஆசை வார்த்தைகள் கூறினார் நான் மயங்கி விட்டேன் என்று அவர் ஒருவேளை கூறுவார் ஆனாலும் பொறுப்புக் கூறலில் இருந்து அவர் தப்ப முடியாது முதன்மை குற்றவாளி முகிலன் என்றால் இரண்டாம் குற்றவாளி அந்தப் பெண்ணும் தான்.

உணர்ச்சி வசப்பட்டு தவறிழைத்தால் அதற்கு உரிய தண்டணையை சேர்த்தே அனுபவிக்க வேண்டும். தீர்வாக என்ன எதிர்பார்க்கிறீர்கள். மன்னிப்பா? திருமணமா? தண்டணையா? விவாதம் என்று வந்துவிட்டால் இவை அனைத்தும் பேசப்பட வேண்டியவையே?
நடுநிலை என்று கூறி முகிலனுக்கு எதிராக தவறிழைப்பவர்கள் எங்கு சறுக்குகிறார்கள். தவறு என்றால் இரு தரப்பையும் கண்டிக்க வேண்டுமா? வேண்டாமா?

 
பொதுவில் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்றால் இரு தரப்பிலும் கருத்துச் சொல்லாமல் ஒதுங்க வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது 'நடுநிலை'யாளர்கள் அந்தப் பெண் போடும் கருத்துகளுக்கெல்லாம் லைக் கொடுப்பதும் 'ஹா ஹா' போடுவதும் எதைக் காட்டுகிறது. ஒருதலைச் சார்பைத்தான் காட்டுகிறது.

 அந்தப் பெண் முகிலனை எதில் கொண்டுபோய் நிறுத்துகிறார். தன்னை ' ஏமாற்றிய' இந்த நபரின் பொதுவாழ்வே பொய்யானது, போலித்தனமானது என்று கூற முனைகிறார். அதை பற்றி கண்டு கொள்ளாமல் அல்லது விரும்பியே மெளனமாக உடன் உள்ள நடுநிலையாளர்களும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் உங்கள் நோக்கம்தான் என்ன?How is Mukhilan guilty?

குறிப்பிட்ட தனிப்பட்ட வாழ்வின் பலவீனத்தை அவரின் மொத்த பொதுவாழ்வின் மீதும் சுமத்துவதை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்‌.
மீண்டும் நினைவூட்டுகிறேன்

1) அந்தப் பெண் மீது பலாத்காரம் நிகழ்த்தப்படவில்லை அந்தப் பெண் கூற்றுப்படி அது விரும்பிய உறவு. அதில் முகிலன் என்ன வாக்களித்தார் என்று இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. அதை பற்றி கூறாமல் பொதுவில் ஏமாற்றுதல் என்பது யாருக்கும் பயன்படாது.
2) முகிலனின் தனிப்பட்ட வாழ்வின் பலவீனங்களை வைத்து அவரின் மொத்த வாழ்வையும் போலியாக சித்தரிப்பது தவறானது.
3) நடுநிலை என்பதன் பொருள் ஒருவருக்கு மறைமுக ஆதரவு அளிப்பது அல்ல...’’ என அவர் விளக்கியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios