Asianet News TamilAsianet News Tamil

ராமேஸ்வரத்தில் 10 கோடி தங்கம் பிடிபட்டது எப்படி? கடத்தல் இங்கே மட்டும் அதிகமாவது ஏன்?

ராமேஸ்வரம் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு10கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டுள்ளது.இந்த பகுதியில் தொடர்ந்து தங்கம் இலங்கையில் இருந்து அதிகாரிகள் துணையுடன் கடத்தி வரப்படுகிறதாம்.இதனால் தான் கடத்தல்க்காரர்கள் இந்த பகுதியை அதிகமாக விரும்புகிறார்களாம்.

How has 10 crore gold caught in Rameshwaram? Why is kidnapping only so much here?
Author
Rameshwaram, First Published Mar 5, 2020, 8:49 AM IST

T.Balamurukan
ராமேஸ்வரம் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு10கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டுள்ளது.இந்த பகுதியில் தொடர்ந்து தங்கம் இலங்கையில் இருந்து அதிகாரிகள் துணையுடன் கடத்தி வரப்படுகிறதாம்.இதனால் தான் கடத்தல்க்காரர்கள் இந்த பகுதியை அதிகமாக விரும்புகிறார்களாம்.

How has 10 crore gold caught in Rameshwaram? Why is kidnapping only so much here?

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்துக்கு படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஹோவர் கிராப்ட் கப்பலில் இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றனர். மண்டபம் அருகே முயல்தீவுக்கும், வேதாளைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலில் சென்ற ஒரு பைபர் படகை நிறுத்த முயன்ற போது, அந்த படகில் இருந்த 2 பேர் படகை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்று தப்பிக்க முயன்றனர். இதனால் ,போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து கடலோர காவல்படையினர் அந்த படகை விரட்டி பிடித்தனர்.

 அந்த படகை பிடித்து விசாரணை செய்ததில் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த ஆசிக் (வயது 22), பாரூக் (22). அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். படகையும் சோதனையிட்டனர்.இருந்தாலும் அந்த வாலிபர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.உடனே அவர்கள் இருவரையும் சிறப்பாக கவனித்ததில், இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்ததை மளமளவென சொன்னதாக சொல்லப்படுகிறது. கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகளை, கடலோர காவல் படை துரத்தியதால் அதை கடலில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வீசிவிட்டதாகவும், தங்கம் வீசப்பட்ட கடல் பகுதியை ஜி.பி.எஸ். கருவியின் உதவியுடன் அடையாளம் காணும் வகையில் அந்த இடத்தை பதிந்து வைத்திருப்பதாகவும் கடத்தல்காரர்கள் தெரிவித்தாக மத்திய வருவாய் பிரிவு அதிகாரிகள் சொல்லுகிறார்கள்.

How has 10 crore gold caught in Rameshwaram? Why is kidnapping only so much here?

இரண்டாவது நாளாக மண்டபத்தில் இருந்து மீண்டும் கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படையினரும், மத்திய வருவாய் புலனாய்வு துறையினரும் கடத்தல்க்காரர்களை  அழைத்துக்கொண்டு நடுக்கடலுக்கு புறப்பட்டனர். தங்கத்தை வீசியதாக கூறப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டிதும். தயார்நிலையில் இருந்த இந்திய கடலோர காவல்படை வீரர்கள் 3 பேர், கடலில் குதித்து 5 பார்சல்களை எடுத்து வந்தனர். அந்த பார்சல்கள் கருப்பு நிறத்தில் இருந்தன. அவற்றின் உள்ளே ஏராளமான தங்கக்கட்டிகள் இருந்தன.

How has 10 crore gold caught in Rameshwaram? Why is kidnapping only so much here?

நகை மதிப்பீட்டாளர் வரவழைக்கப்பட்டு எடை போட்டு மதிப்பிடப்பட்டதில் மொத்தம் 15 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி என்று கூறப்படுகிறது.கடந்த 5 வருடத்துக்கு பிறகு இவ்வளவு அதிகமான கடத்தல் தங்கம் ராமேசுவரம் பகுதியில் பிடிபட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். அதனை கடத்தி வந்த ஆசிக், பாரூக் ஆகிய 2 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கம் கடத்தல்க்காரர்கள் ராமேஸ்வரம் பகுதியை தேர்தேடுப்பதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அந்த காரணங்கள் மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கும்,கடலோரக்காவல் போலீசாருக்கும் நன்றாகவே தெரியும் என்கிறார்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள்.

Follow Us:
Download App:
  • android
  • ios