சேலம் அருகே காக்காபாளையம் பகுதியில் வேம்படித்தாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சுற்றியுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்தார்.  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  உதவித் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் பாலாஜி, வேதியியல் பாடத்திற்கும் இவர்தான் ஆசிரியர் என்பதால், மாணவிகளை அடிக்கடி ஆய்வுக்கூடத்திற்கு அழைத்து  சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவி ஒருவர் கர்ப்பமானதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியான அந்த மனைவியின் பெற்றோர் கேட்டதற்கு ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆசிரியர் பாலாஜி தன்னை பலவந்தமாக கற்பழித்ததாகவும், அதையே காரணம் காட்டி பலமுறை தொடர்ந்து மிரட்டி உல்லாசம் அனுபவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்க்கு முன்பாக மாணவி கர்ப்பம் ஆன சம்பவம் சகதோழிகளுக்கு தெரிந்து உள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிந்தது. இதனால் இந்த சம்பவம் பள்ளிக்கூடத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

மாணவியை கர்ப்பமாக்கிய சம்பந்தப்பட்ட உதவி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியில் படித்து வரும் மற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் ஏராளமானவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் மாணவி கர்ப்பம் ஆன சம்பவம் வெளியில் தெரிந்ததும், உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி மருத்துவ விடுமுறை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி போலீசார், பின்னர் உதவி தலைமை ஆசிரியர் பாலாஜியை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அரியானூர் பகுதியில் மறைந்து இருந்த உதவி தலைமை ஆசிரியர் பாலாஜியை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பின் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் உதவி ஆசிரியரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஒரு நாள் பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வக அறையில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி உள்ளார். பின்னர் செய்முறை வகுப்பு முடிந்ததும் மாணவ, மாணவிகள் ஆய்வகத்தில் இருந்து வகுப்பறைக்கு சென்று உள்ளனர். சம்பந்தப்பட்ட அந்த மாணவியை மட்டும் ஆய்வகத்தில் இருக்கும் படி  பாலாஜி கூறி உள்ளார். ஏதோ பாடத்தில் தான் சந்தேகம் பற்றி சொல்லி கொடுப்பார் என்று நினைத்து வெகு நேரமாக அந்த மாணவியும் இருந்து உள்ளார். மற்ற  மாணவிகள் ஆய்வகத்தை விட்டு வெளியில் சென்றதை அறிந்து கொண்ட பாலாஜி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்ப்பம் ஆன மாணவிக்கு நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட உதவி தலைமை ஆசிரியர் பாலாஜிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இதற்க்கு முன்னதாக அந்த மாணவியின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் பெண் காவல் ஆய்வாளர் புஷ்பராணி அந்த ஆசிரியரால் கர்ப்பமான மாணவியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுத் தருவதாகவும், ஆசிரியர் மீதான புகாரை வாபஸ் வாங்கவும் கருவைக் கலைக்கச் செய்யும்படியும் மிரட்டியுள்ள சம்பவமும்நடந்துள்ளது.