கல்லூரி பேராசிரியைக்கும் இஎஸ்ஐ மருந்தக ஊழியருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்கள்
உடல் நிலை சரியல்லாமல் ஷீபா சில நாட்கள் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவரை தொடர்பு கொண்ட ரதீஷ்குமார் அந்த பில்லை கொண்டு வந்தால் பணம் பெற்று தருவதாகக் கூறியுள்ளார்.
பிரபல பாலிடெக்னிக் கல்லூரியில் 10 ஆண்டுகள் பேராசிரியையாக பணியாற்றி வந்த ஷீபாவுக்கும் இஎஸ்ஐ மருந்துவமனையில் பணியாற்றி வந்த ரதீஷ்குமாருக்கும் கள்ளத்தொடர்பு எப்படி ஏற்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஷீபாவின் தந்தை, வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2009ல் ஷீபாவிற்கு திருமணமானது. இவரது கணவர் மருந்து விற்பனை பிரதிநிதி. 2 குழந்தைகள் உண்டு. 2வது குழந்தை பிரசவத்துக்கான ஆப்ரேஷன் கிளைம் தொடர்பாக கருங்கல் இஎஸ்ஐ அலுவலகத்திற்கு சென்றபோது ரதீஷ் குமாருக்கும் ஷீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- காதல் திருமணம் செய்த தம்பதி படுகொலை.. மகன் இறந்தது கூட தெரியாத தாய்.. அனாதையாக கிடைக்கும் மோகனின் உடல்.!
உடல் நிலை சரியல்லாமல் ஷீபா சில நாட்கள் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவரை தொடர்பு கொண்ட ரதீஷ்குமார் அந்த பில்லை கொண்டு வந்தால் பணம் பெற்று தருவதாகக் கூறியுள்ளார். இப்படி இவர்கள் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஷீபா தனது தாய் இறந்தது உள்ளிட்ட விஷயங்களை ரதீஷ்குமாரிடம் பகிர்ந்துள்ளார். அவர் ஆறுதல் கூறியுள்ளார். இப்படி நெருக்கம் ஏற்பட்டு அவர்களுக்குள் கள்ளக்காதல் மலர்ந்தது. இதனையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதையடுத்து தனது கணவரிடம் விவகாரத்து பெற்று குழந்தைகளை விட்டுவிட்டு ரதீஷ்குமாருடன் வாழ ஷீபா முடிவு செய்தார். ஆனால், திடீரென ரதீஷ்குமார் சென்னை ஐ.டி. துறையில் பணியாற்றும் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால், ஷீபா அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் ஷீபா உடனான தொடர்பை துண்டித்தார். இதை தாங்க முடியாத ஷீபா பலமுறை ரதீஷ்குமாரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர் ஷீபாவை கண்டுகொள்ளவில்லை.
இதையும் படிங்க;- கும்பகோணத்தில் ஆணவக் கொலை? திருமணமான 5ம் நாளில் விருந்துக்கு வீட்டுக்கு அழைத்து காதல் தம்பதி வெட்டி படுகொலை.!
இந்நிலையில், ரதீஷ்குமாருக்கு போன் செய்து, கடைசி முறையாக எனது பிறந்த நாளில் உன்னை பார்க்க விரும்புகிறேன். இனி தொந்தரவு செய்யமாட்டேன் என்றார். அதன் பின் மயக்க மாத்திரை கலந்த உணவை ரதீஷ்குமாருக்கு தன் கையால் பரிமாறியுள்ளார். இதில் ரதீஷ்குமார் மயக்கமடைந்த போது மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கேயே, அவரது சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர் அவசர எண் 100 க்கு தொடர்பு கொண்டு கொலை குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்ததிற்கு விரைந்த போலீசார் ஷீபாவை செய்தனர்.
இதையும் படிங்க;- ஹோட்டலில் ரூம் போட்டு அந்த பெண் என்னை கதற கதற பலாத்காரம் செய்தார்.. காவல்நிலையத்தில் கதறிய ஆண்.!