குன்றத்தூரி கள்ளக்காதல் விவகாரத்தில் தாயே பிள்ளைகளை கொன்ற சம்பவம் , இப்படியும் கூட ஒரு தாய் செய்வாரா? என்ற கேள்வியையே அனைவர் மனதிலும் எழ வைத்திருக்கிறது. 

இந்த கொலைகளை செய்து தற்போது சிறையில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் அபிராமி மீது கொலை வெறியில் இருக்கின்றனர் தமிழக மக்கள்.  அபிராமி தன் இரண்டுக் குழந்தைகள் மீதும் காட்டிய அக்கறையை விட, தன் அழகின் மீது காட்டிய அக்கறை தான் அதிகம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இதனாலேயே அவர் பெரும்பாலும் மேக்கம் செய்து கொள்வது அழகாக உடுத்தி கொள்வது, ஊர் சுற்றுவது என பொழுதை போக்கி இருக்கிறார். குழந்தைகளை கூட அவர்கள் குடியிருந்த வீட்டு ஓனர் தான் கவனித்து கொள்வாராம். தன் வீட்டு பிள்ளைகளை போல அந்த இரண்டு குழந்தைகளையும் பார்த்த அந்த அம்மா, இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறாரா. 

யாரிடம் பேச முயன்றாலும் அவருக்கு கண்ணீர் தான் பெருக்கெக்கிறதாம். அந்த குழந்தைகள் எப்போதும் எங்க வீட்டில தான் இருக்கும். அதுலயும் அந்த குட்டி பாப்பா கார்னிகா பிறந்ததுல இருந்து நான் , அவள பார்த்துகிட்டிருக்கேன். அவளுக்கு நான் சாப்பிட ஊட்டி விட்டா திருப்பி அவ எனக்கு ஊட்டி விடுவா என கூறும் போதே குரல் உடைந்து அழ ஆரம்பித்துவிடுகிறார் அந்த அம்மா. 

விஜய் தம்பி ரொம்ப நல்லவர். குடும்பத்துக்காக அவ்வளவு தூரம் உழைப்பார். வேலை எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பிறகு அவர் தான் வீட்டில இருக்குற துணிமணிகளை துவைச்சு காயப்போடுவார். பொண்டாட்டியயும் குழந்தைங்களயும் உள்ளங்கையில் வெச்சு தாங்குவார். அபிராமி தப்பு பண்ணறானு தெரிஞ்சபிறகும் கூட மன்னிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்காரு.

முதல்ல சண்ட போட்டலும் கூட பிறகு அவ எப்படியும் போகட்டும்ங்குற மனநிலைக்கு வந்துட்டார் விஜய். அவ அப்படியே போயிருக்கலாம் இப்படி இந்த பிஞ்சுங்கள கொன்னுட்டாளே என ஆதங்கப்படுகிறார் அந்த வீட்டு ஓனர். எப்போது குழந்தைகளை ஓனர் வீட்டில் விட்டு செல்லும் அபிராமி, சில நாட்களுக்கு முன்னர் தனியாகவே விட்டு சென்றிருக்கிறார். 

தனியாக பூட்டிய வீட்டுக்குள் அமைதியாக விளையாடிக்கொண்டிருக்குமாம் அந்த குழந்தைகள். அந்த குழந்தைங்க எப்பவும் இங்க தான் சந்தொஷமா விளையாடிட்டு இருப்பாங்க. அவங்க இல்லாம இங்க இருக்க எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. இவ்வளவு சமத்தான குழந்தைகளை கொல்ல அபிராமிக்கு எப்படி தான் மனது வந்ததோ தெரியவில்லை.