சென்னையில் உல்லாசமாக இருந்ததை படம் எடுத்து மிரட்டி வீட்டு உரிமையாளரிடம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வீட்டு வேலை செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை திருவான்மியூர் புதிய கடற்கரை சாலையை சேர்ந்தவர் 47 வயதான மனோஜ்குமார். குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 30 வயதான சித்திரவள்ளி என்ற பெண், வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். உரிமையாளர் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோடை விடுமுறை என்பதால் மனோஜ்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊருக்கு சென்றனர். ஆனால் மனோஜ்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

 

இதனையடுத்து மனோஜ்குமாருக்கும், வேலைக்காரி சித்திரவள்ளிக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத சமயத்தை பயன்படுத்திக்கொண்ட அவர் வேலைக்காரியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன், சித்திரவள்ளியை தேடி அவரது உறவினர் ஜீவா என்பவர், மனோஜ்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, சித்திரவள்ளியுடன் மனோஜ்குமார் உல்லாசமாக இருந்ததை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை சித்திரவள்ளியை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். 

மீண்டும் நேற்று முன்தினம் மனோஜ்குமார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய சித்திரவள்ளி, ‘‘நீங்கள் கொடுத்த பணம் செலவாகி விட்டது. உடனடியாக ரூ. 1 லட்சம் தேவைப்படுகிறது,’’ என மிரட்டியுள்ளார். அப்போதுதான், இந்த பணம் பறிப்புக்கு சித்தரவள்ளியும் உடந்தை என அவருக்கு தெரியவந்தது. சித்திரவள்ளி, நாம் உல்லாசமாக இருந்ததை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மிரட்டல் விடுத்த பெண்ணை தேடி வருகின்றனர்.