பிரபல ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த ஓட்டலுக்கு தம்பதி ஒருவர் சாப்பிடுவதற்காக சென்று உள்ளனர். சாப்பிட்டு முடித்த பிறகு அந்தப் பெண் கழிப்பறைக்கு சென்றார். அப்போது கழிப்பறை ஜன்னல் அருகே ஒரு வெள்ளை காகிதத்தில் ஏதோ ஒரு பொருள் வைக்கப்பட்டிருப்பதை அந்த பெண் கவனித்தார்.
பிரபல ஓட்டலில் பெண் கழிப்பறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாகவே ரகசிய கேமராக்கள் விவகாரம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மக்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை போலீசார் வைத்துள்ளனர். இந்த கேமராக்களை வைத்த பிறகு தான், எத்தனையோ குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிகிறது. பல வழக்குகளுக்கு தடயங்களை அள்ளித்தரும் கருவியாக இந்த சிசிடிவி கேமராக்கள் உதவி கொண்டிருக்கின்றன. ஆனால், பொது இடங்களிலும் ரகசிய கேமராக்களை சில விஷமிகள் பொருத்திவிடும் அபாயம் தலைதூக்கி வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோடு நகரின் மையப்பகுதியில் ஒரு பிரபல ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த ஓட்டலுக்கு தம்பதி ஒருவர் சாப்பிடுவதற்காக சென்று உள்ளனர். சாப்பிட்டு முடித்த பிறகு அந்தப் பெண் கழிப்பறைக்கு சென்றார். அப்போது கழிப்பறை ஜன்னல் அருகே ஒரு வெள்ளை காகிதத்தில் ஏதோ ஒரு பொருள் வைக்கப்பட்டிருப்பதை அந்த பெண் கவனித்தார். உடனே அதை திறந்து பார்த்தார். அப்போது அதில் ஒரு செல்போன் கேமரா ஆன் செய்யப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக கணவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கழிப்பறையில் கேமராவை வைத்தது அந்த ஓட்டலில் பணிபுரியும் ஊழியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த துபைல் (23) என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு போலீசார் துபைலை கைது செய்து கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
