Asianet News TamilAsianet News Tamil

காருக்குள் கை விட்டு ஹேண்ட்பேக் திருடிய காக்கி.. வீடியோ எடுத்து வைரலாக்கிய புள்ளிங்கோ.. டிஸ்மிஸ்..

அரவிந்தனின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்த  இளைஞர்கள் சிலர் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரை மடக்கி பிடித்து அவரை செல்போனில் படம் பிடித்தனர். தான் வசமாக சிக்கிக் கொண்டதை உணர்ந்த அரவிந்தன், தயவுசெய்து இந்த வீடியோவை வெளியிட்டு விடாவேண்டாம். நான் சரண்அடைந்து விடுகிறேன் என அந்த இளைஞருடன் கெஞ்சினார். 

Home Guard steals handbag from car ..video viralizes by Pullingo. SP Give dismiss order.
Author
Nagai, First Published Aug 3, 2021, 7:42 PM IST

நாகூர் கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகளின் உடமைகளை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிக்க முயன்ற ஊர்க்காவல் படை காவலரை அங்கிருந்த இளைஞர்கள் மடக்கிப்பிடித்து போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் நாகூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நாகை மாவட்ட எஸ்பி ஜவஹர் அந்த நபரை பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இச்சமூகம் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் நீங்கி அமைதியாகவும், மக்கள் அச்சமின்றி வாழும் அமைதிப்பூங்காவாகவும் திகழ்வதற்கு அடிப்படையாக இருக்கிறது காவல்துறை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய போலீசே சில சயமங்களில் சட்டத்தை  மீறும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கொள்ளையர்களிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸே அந்த மக்களிடமிருந்து கொள்ளை அடித்தால், அது எவ்வளவு மோசமான முன்னுதாரணமாக இருக்கும் என்பதை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. 

Home Guard steals handbag from car ..video viralizes by Pullingo. SP Give dismiss order.

ஆனால் அந்த வகையில் நாகை மாவட்டம் நாகூரில், கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் உடமைகளை லாவகமாக திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த ஊர்க்காவல் படை வீரர் அங்கிருந்த இளைஞர்களால் கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் பணம் குடியைச் சார்ந்தவர் அரவிந்தன் (வயது 33) இவர் கடந்த ஆறு வருடமாக ஊர்க்காவல் படையில் இணைந்து பணியாற்றி வருகிறார். நாகூர்  காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை நாகூர் கடற்கரைக்கு வெளியூரிலிருந்து வந்திருந்த சில பயணிகள்  அங்கிருந்த கடற்கரையை ரசித்தபடி உல்லாசமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கார் கண்ணாடி மூடாமல் இருந்ததை பார்த்த ஊர்க்காவல் படை அரவிந்தன், தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டு, அவர்களின் காரில் வைத்திருந்த செல்போன், ஹான் பேக் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு லாவகமாக  அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிக்க முயற்சி செய்தார். 

Home Guard steals handbag from car ..video viralizes by Pullingo. SP Give dismiss order.

அரவிந்தனின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்த  இளைஞர்கள் சிலர் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரை மடக்கி பிடித்து அவரை செல்போனில் படம் பிடித்தனர். தான் வசமாக சிக்கிக் கொண்டதை உணர்ந்த அரவிந்தன், தயவுசெய்து இந்த வீடியோவை வெளியிட்டு விடாவேண்டாம். நான் சரண்அடைந்து விடுகிறேன் என அந்த இளைஞருடன் கெஞ்சினார். ஆனால் அந்த இளைஞர்கள் ஒரு காவல் துறையில் பணியாற்றிக் கொண்டு, வெளியூரில் இருந்து வந்த பயணிகளிடத்தில் இப்படி திருடுகிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என சரமாரியாக அரவிந்தனை திட்டி தீர்த்தனர்.

பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அரவிந்தனை கையும் களவுமாக  போலீசில் ஒப்படைத்தனர். அதற்கான வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட எஸ்.பி ஜவஹர், அரவிந்தனை ஊர்க்காவல் படையில் இருந்து அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்களிட் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே இப்படி மக்களிடமிருந்து உடைமைகள் பறிப்பது ஒட்டுமொத்த காவல் துறைக்கும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.  காக்கிச்சட்டை போர்வையில் ஒளிந்துள்ள சமூக விரோதிகளை அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios