கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி முக்கிய நிர்வாகி.. இது தான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஏட்டு ஒருவரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்வு மற்றும் நகையைத் திருப்பிக் கேட்டதாலும் கூலிப்படையை ஏவி மணிகண்டன் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஏட்டு மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தால் கூலிப்படையை ஏவி இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவர் சோலையழகுபுரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்து மக்கள் கட்சியில் மதுரை தென்மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு தனது கடைக்கு செல்வதற்காக மணிகண்டன் வந்து கொண்டிருந்த போது அவரை மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- பார்த்ததுமே பத்திக்கிச்சு.. 17 வயது சிறுவனுடன் எஸ்கேப்பான 33 வயது ஆன்டி... எங்கு கூப்பிட்டு சென்றார் தெரியுமா?
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஏட்டு ஒருவரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்வு மற்றும் நகையைத் திருப்பிக் கேட்டதாலும் கூலிப்படையை ஏவி மணிகண்டன் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க;- வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம்.. கல்லாகட்டிய அதிமுக பெண் முக்கிய நிர்வாகி கணவருடன் சிக்கினார்..!
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏட்டு மற்றும் கூலிப்படையை சேர்ந்த 7 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்து மக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.