அந்த பெண்ணுக்கு ஒரிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவருடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பதும், அவருடன் சண்டை போட்டதற்காக ரூ.1.5 லட்சத்திற்கு விற்றுவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், நீமுச் மாவட்டத்தின் ராம்பூர் கிராமத்தில் சுப்ரியா பிரஜாபதி என்ற பெண் கடத்தப்பட்டு ராஜஸ்தான் கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது அதிர வைக்கும் உண்மைகள் வெளிவந்து இருக்கிறது.

விசாரணையில், ‘அந்த பெண்ணுக்கு ஒரிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவருடன் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பதும், அவருடன் சண்டை போட்டதற்காக ரூ.1.5 லட்சத்திற்கு விற்றுவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. அந்த பெண்ணை வாங்கிய மனோஜ் பிரஜாபதி அவரை கட்டாய திருமணம் செய்து ராஜஸ்தான் சென்று கணவன் மனைவியாக வாழலாம் என்று கூட்டிச் செல்லும்போது காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், ‘நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவே ரூ1.5 லட்சம் கொடுத்தேன்.

அவள் ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றவள் என்பது எனக்குத் தெரியாது’ என்று மனோஜ் பிரஜாபதி கூறியுள்ளார். தற்போது மனோஜை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஜார்சுகுடாவைச் சேர்ந்த ஹ்ருசிகேஷ் சேத்தி, கிரண் சேத்தி மற்றும் டானிஷி ஆகிய மூவரைக் கைது செய்த போலீசார், அடுத்ததாக் கணவனையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். சண்டை போட்டதற்காக மனைவியை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
