கணவன் மனைவி சண்டையில் தலையிட்டு சமாதானம் செய்து வைத்த சப் இன்ஸ்பெக்டர் மீது அந்த பெண்ணின் கணவரே கள்ளத் தொடர்பு புகார் கூறி வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவிட்டு பரபரப்பு புகார் கூறியுள்ளார். 

சபரிமலை போராட்டத்தின் போது சிறப்பாக பணியாற்றியதற்காக கேரளா மாநில அரசால் கவுரவிக்கப்பட்டவர் மோகன அய்யர் களியக்காவிளை ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர். ரியல் சிங்கம் என்று அடைமொழி கொடுத்து ஊடகங்களில் செய்தி வெளியானது.  இந்நிலையில், வெளிநாட்டில் வேலை செய்து வரும் சோமன்  தனது மனைவியை சப் இன்ஸ்பெக்டர் அபகரித்துக் கொண்டதாகவும், இருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

தான் மனம் உடைந்து போயிருப்பதாகவும் அவர் பதிவிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. மாவட்ட எஸ்பி இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். நடந்தது என்ன? வெளிநாட்டில் வேலை செய்து வரும் சோமன் ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த போது குடித்து விட்டு மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. 

இது குறித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் சோமனையும் அவரமு மனைவியையும் அழைத்து விசாரித்தார். நடவடிக்கை எடுப்பேன் கணவர் சோமனிடம் அட்வைஸ் செய்த சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யர், இனி அடிக்கக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தாராம். மேலும் இப்படி குடித்து விட்டு மனைவி குழந்தைகளை தொல்லைக்கொடுப்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய சப் இன்ஸ்பெக்டர், அந்த பெண்ணிடமும் குடும்ப பிரச்சினை போலீஸ் ஸ்டேசன் வரை வரக்கூடாது அனுசரித்து செல்லுங்கள் என்று கூறினாராம். மீண்டும் அடித்தால் எனக்கு போன் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார். 

இந்நிலையில், வாட்ஸ் அப்பில் அவதூறு இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் வெளிநாடு சென்ற சோமன், தன்னைப் பற்றி போலீசில் புகார் அளித்த மனைவியையும், தன்னை எச்சரித்த சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யரையும் அசிங்கப்படுத்த நினைத்து அவதூறாக தனது மனைவிக்கும், போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக வீடியோ அனுப்பியுள்ளதாக போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.  

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல போலீஸ் ஸ்டேசன்களில் பணிசெய்து நேர்மையான காவல்துறை அதிகாரி என்று பெயரெடுத்துள்ள மோகன அய்யர் மீது கள்ளத்தொடர்பு புகார் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.