சென்னையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் வத்சலாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (36). அச்சக ஊழியர். குடிப்பழக்கம் உடையவர்.  இவரது மனைவி இறந்துவிடார். இவரது 13 வயதில் மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமியை அவரது பாட்டி பராமரிக்கிறார். மூர்த்தி வேலை முடித்து விட்டு வீட்டிற்கு குடித்து விட்டு வருவது வழக்கம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த 20ம் தேதி இரவு மூர்த்தி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி இதுகுறித்து பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியின் பாட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை மூர்த்தியை போச்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.