மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டில் அடைத்து 9-ம் வகுப்பு மாணவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பள்ளி மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டில் அடைத்து 9-ம் வகுப்பு மாணவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பள்ளி மாணவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாற்றுத்திறனாளி பெண். அதே பகுதியை சேர்ந்தவர் 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன். இந்நிலையில், நேற்று மாலை முதல் 17 வயது மாற்றுத்திறனாளி பெண் திடீரென மாயமானதால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் அப்பகுதி முழுவதும் தேடிவந்தனர்.
இதனையடுத்து, அந்த மாணவனின் வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அந்த மாணவன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் மாற்றுத்திறனாளி பெண்ணை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த பரிசோதனையில், பாலியல் தொல்லைக்கு தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தில் பள்ளி மாணவனை கைது செய்தனர். மாணவருக்கு 18 வயது நிரம்பாததால் அவனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 3, 2019, 11:09 AM IST