குடும்பம் நடத்த வராததால் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். கண்ணகி நகரில் இந்த சமத்துவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த கண்ணகி நகரில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் ராமு. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. ராமுவுக்கும் பக்கத்து வீட்டு பெண் லட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. மனைவி தூங்கியதும் பக்கத்து வீட்டு லட்சுமியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

ஒரு நாள் திடீரென கண் விழித்த மகாலட்சுமி லட்சுமி ராமு இருவரும் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துள்ளார். அன்னான் தங்கை என உறவுமுறை வைத்து பழகியதால் கண்டுகொள்ளாமல் விட்ட நிலையில் இவர்கள் தகாத உறவை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.   இதனால் அவர் கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று இரவு ராமு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். லட்சுமியை குடும்பம் நடத்த வீட்டுக்கு அழைத்தார். அவர் வராததால் ஆத்திரம் அடைந்தார். உன்னால் தான் என் மனைவி வீட்டை விட்டு போய்விட்டாள், நீ வா என கையை பிடித்து இழுத்துள்ளார். அவர் குடும்பம் நடத்த வர மறுக்கவே கத்தியால் லட்சுமியை குத்தியுள்ளார். தோள்பட்டையில் குத்துப்பட்ட லட்சுமி கண்ணகி நகர் போலீசில் புகார் செய்தார். பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆட்டோ டிரைவர் ஆட்டோ டிரைவர் ராமு தப்பி ஓடிவிட்டார். கள்ளக்காதலியை கொடூரமாக குத்திய ஆட்டோ டிரைவரை  கண்ணகி நகர் போலீஸ் வலைவீசித் தேடி வருகின்றனர்