வேறொருவருடன் கல்யாணம் ஆன பெண்ணை, மனைவியை திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி, கர்ப்பமாக்கிய ஜிம் பயிற்சியாளரை, திருமணம் நடக்கும் போதே  மண்டபத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் அடுத்த தொட்டபள்ளாப்பூர் பகுதியை சேர்ந்த கவுதம்அதே பகுதியில் புல்லட் ஜிம் என்ற பெயரில் ஜிம் நடத்தி வந்தார். இவரே இங்கு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்,இங்கு ஜிம் ஆண் மற்றும் பெண்களுக்காக தனித்தனியாக இருக்கிறது. இந்த நிலையில், கடந்த வருடம் அந்த ஜிம்மில் வயது 24 வயதாகும் கல்யாணமான இளம் பெண் பிரணிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடற்பயிற்சி செய்ய இணைந்துள்ளார்.

பிரணிதாவின் செல்போன் எண்ணை ரிஜிஸ்டரில் இருந்து எடுத்துக் கொண்ட ஜிம் பயிற்சியாளர் கவுதம், பிரணிதாவுக்கு போன் செய்து, உடற்பயிற்சி, உடலை பக்குவமாக பராமரிப்பது குறித்து, டிப்ஸ் கொடுப்பது போல பேசி வந்துள்ளார்.

முதலில் இப்படி பேசி வந்துள்ளார், பிறகு ஒருநாள், பிரணிதா தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதை கவுதமிடம் கூறியுள்ளார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைவிட்டு பிரிந்து அப்பா வீட்டில் வசித்து வருவதாகவும் பிரணிதா கூறியுள்ளார். இதைக்கேட்டதும், கவுதமுக்கு ஈசியாக பிரணிதாவை தனது வலையில் விழவைக்கும் அளவிற்கு பேசியுள்ளார். அதாவது பிரணிதாவுக்கு ஆறுதல் சொல்வது போல மேலும் நெருக்கத்தை அதிகரித்துள்ளார். இதன்பிறகு, திருமண ஆசை காட்டி, ஜிம் வளாகத்தில் வைத்தே ஸ்வேதாவுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன் பின் பகல் நேரங்களில் பெங்களுருவில் சினிமா, பார்க் என கண்டா இடங்களில் சுற்றியும்,  பிரணிதாவை கூட்டிச் சென்று, உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் பிரணிதா கர்ப்பமானார்.

இந்த விஷயம் தெரிந்த கவுதம், திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று பிரணிதாவிடம் சொல்லி கருவை கலைத்துவிட சொல்லி, மூளைச்சலவை செய்து கலைத்துள்ளார்.  இதன்பிறகும், பிராணிதாவுடன் மீண்டும் மீண்டும் உல்லாசம் அனுபத்து  வந்துள்ளார் கவுதம். இதனால் மீண்டும் பிரணிதா கர்ப்பமானதும், அவரைவிட்டு விலக தொடங்கினார்.

இந்நிலையில், கவுதமுக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி, கடந்த 8 மற்றும் 9ம் தேதிகளில் திருமண வரவேற்பு மற்றும் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. இதையறிந்த ஸ்வேதா, காவல் நிலையத்தில், கவுதம் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து தாலி கட்டும் நேரத்தில்  அதிரடியாக மண்டபத்திற்குள் நுழைந்த போலீசார் கவுதமை கைது செய்தனர். மகனின் திருவிளையாடல் தெரிந்தும், திருமணம் செய்து வைக்க முயன்ற அவரின் தந்தை ராஜண்ணாவையும் அள்ளிச்சென்றுள்ளது போலீஸ்.