16 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவரது 16 வயது மகள். அரும்பாக்கத்தில் உள்ள தாத்தா ராமானுஜம் வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக தங்கியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது பேத்திக்கு ராமானுஜம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று வழக்கம்போல சமையலறையில் இருந்த பேத்தியிடம் தாத்தா ராமானுஜம் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று தன்னிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுப்பதாக பேத்தி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ராமானுஜத்தை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் சென்னையில் பிரபல ரவுடியான ராதா என்ற ராதாகிருஷ்ணன் என்பவரின் தந்தை என தெரியவந்தது. மேலும், தனது பேத்தியிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்ததாக ராமானுஜம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போச்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராமானுஜத்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.