உடுமலையில் ஆணவக்கொலையால் பலியான சங்கரின் மனைவி கவுசல்யா சமீபத்தில் மறுமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மறுமணம் செய்து கொண்ட கவுசல்யாவின் போக்கு சரியில்லை எனக்கூறி தங்கள் கிராமத்தில் நுழைய அவருக்கு தடை விதித்துள்ளதால் அவர் ஊரை விட்டு கிளம்பி இருக்கிறார்.

இந்நிலையில், கோவையை சேர்ந்த நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார். சக்தி மீது ஒரு திருநங்கை உட்பட சுயசாதி விமர்சனத்துடன் சமூக மாற்றத்துக்காக பொது வாழ்க்கைக்கு வந்த நான்கைந்து இளம் பெண்களின் வாழ்க்கையை காதல் என்னும் பெயரில் சீரழித்தது வரை குற்றச்சாட்டுகள் உள்ளது. அதிலும் ஒரு பெண்ணுடன் மாதக்கணக்கில் வாழ்ந்து அவளது ஆறு மாத கருவை வலுக்கட்டாயமாகக் கலைத்து நடுத்தெருவில் நிறுத்தியவன் எனவும் கூறப்படுகிறது. தகுந்த ஆதாரங்கள் இருந்தும் நீதி கிடைக்காமல் பல பெண்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில், ஜாதி ஆணவக் கொலையால் கணவர் சங்கரை பறிகொடுத்த உடுமலை கெளசல்யா மறுமணம் செய்த நிமிர்வு கலையகத்தின் சக்தி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மையே என திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர் தியாகு கூட்டாக அறிவித்துள்ளனர்.

இந்த கட்டப்பஞ்சாயத்து நடந்தபோது கவுசல்யாவை சக்தியால் பாதிக்கப்பட்ட பிராமணப் பெண் செருப்பால் அடித்த விவகாரம் போலீஸ் வரை சென்றுள்ளது.  
பிராமண பெண் ஒருவரை ஏமாற்றிவிட்டார் சக்தி என்று குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் கொளத்தூர் மணி, தியாகு, வளர்மதி போன்ற பெரிய மனிதர்கள் முன்னிலையில் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டதை கடந்த இரு தினங்களாக ஏசியா நெட் செய்தி தளத்தில் எழுதி வருகிறோம். அந்தப் பிராமண பெண் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சக்தி, கவுசல்யா இருவரும் விசாரிக்கப்பட்டனர். அப்போது தான் காதலித்து ஏமாற்றப்பட்டதை பிராமணப் பெண் பஞ்சாயத்தில் சொல்லியிருக்கிறார்.

அப்போது சக்தி, ‘பிராமணப் பெண்ணை காதலித்தது உண்மை. நாங்கள் எல்லை மீறி பழகினோம். அதனால் அந்தப் பெண் கர்ப்பம் சுமக்கும் நிலை ஏற்பட்டது’’ என கூட்டத்தில் சொல்லியிருக்கிறார் சக்தி. ஆனால், அதன்பிறகு அவர் சொன்ன செய்திகள்தான் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. ’அதாவது கர்ப்பம் ஏற்பட்டதும் கலைக்கப்போகிறேன் என்று பிராமணப் பெண் சொன்னார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை என்று பஞ்சாயத்தில் சொல்லியிருக்கிறார் சக்தி.

அதுவும் இப்போது சொல்லப்படுவது போன்று 6 மாதம் கர்ப்பமாக இருந்தார் என்று சொல்லப்படும் செய்தி உண்மை இல்லை. கர்ப்பம் என்பது தெரியவந்ததுமே இருவருக்கும் பிரச்னை வந்துவிட்டது. யோசித்து முடிவெடுக்கலாம் என்று சொன்னதும், என்னை கலந்து ஆலோசிக்காமல் பிராமணப் பெண் தானே சென்று கர்ப்பத்தைக் கலைத்துவிட்டாள். அதன் பிறகும் நாங்கள் நெருக்கமாகத்தான் பழகி வந்தோம் என்று சொல்லி இருக்கிறார் சக்தி.

உடனே பிராமணப் பெண், ’சக்தி பொய் சொல்கிறான்..’ என்று கத்தியிருக்கிறாள். அதன்பிறகும் பேசிய சக்தி ’எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. அதன்பிறகு நாங்கள் பிரிந்துவிட்டோம். பிராமணப் பெண் என்னை சந்திப்பதை, பேசுவதை நிறுத்திவிட்டார். எனக்கும் பிராமணப் பெண்ணுக்கும் நடந்த அத்தனை விஷயங்களும் கவுசல்யாவுக்கு தெரியும். இனி பிராமணப் பெண் எங்களுக்கு இடையில் வரமாட்டார் என்று தெரிந்துதான் காதலை ஏற்றுக்கொண்டார் கவுசல்யா.

நான் கவுசல்யாவை திருமணம் முடித்ததை பிராமணப் பெண்ணால் தாங்க முடியவில்லை, அதனால்தான் என் மீது வேண்டுமென்றே பொய்யான புகார் கொண்டு வந்திருக்கிறார். நாங்கள் இருவரும் பேசி பிரிந்துவிட்டோம். எங்களுக்குள் இனி எதுவுமில்லை என்று சக்தி சொல்லியிருக்கிறார். உடனே ஆத்திரமடைந்த பிராமணப் பெண் கோபத்துடன் காலில் இருந்த செருப்பைக் கழட்டி சக்தியை அடிக்க முயன்றுள்ளார்.

அப்போது சக்தியைக் காப்பாற்றுவதற்காக கவுசல்யா நடுவில் புகுந்ததும், செருப்படி அவர் மீது விழுந்திருக்கிறது. அவர்களை பிடிக்க சக்தி முயல, அவருக்கும் செருப்படி விழுந்திருக்கிறது. இதனை மானமிகு பஞ்சாயத்தார்கள் கொளத்தூர் மணி, தியாகு போன்றவர்கள் சந்தோஷமாக வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். வளர்மதி கைதட்டி உற்சாகப்படுத்தாதது மட்டும்தான் பாக்கி என்கிறார்கள்.

இப்போது இந்த விவகாரம் மனித உரிமை ஆர்வலர்கள் கைக்குப் போயிருக்கிறது. அதாவது மனித உரிமை பற்றி பேசும் நபர்கள் எத்தனை கொடூர மனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள், கொளத்தூர் மணி, தியாகு மற்றும் வளர்மதியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிககை எழுந்துள்ளது. மேலும் கவுசல்யா பறை அடிக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டதன் பின்னே, இவர்களின் சாதிப் பற்று ஒளிந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.