Asianet News TamilAsianet News Tamil

அரசு பள்ளி ஆசிரியை நடுரோட்டில் கழுத்தறுத்து கொடூர கொலை.. காதலன், நண்பனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி காலை அல்லிநகரத்தில் இருந்து பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்ற கமருன்னிஷாவை வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினார். 

Government school teacher murder...Double life sentence for boyfriend
Author
Perambalur, First Published Oct 29, 2021, 6:39 PM IST

ஆசிரியையை கழுத்தறுத்து கொலை செய்த முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதி மாலா நகரை சேர்ந்தவர் சேட்டு. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மகள் கமருன்னிஷா (31). இவர் குன்னம் அருகே உள்ள இலந்தகுழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை பார்த்தார். பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த செல்லமுத்துவின் மகன் ஆனந்த் (33). பேட்டரி கடை நடத்தி வருகிறார். கமருன்னிஷா, ஆனந்த் இருவரும் காதலித்து வந்தனர். 

இதையும் படிங்க;- கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி.. போலீசில் பகீர் வாக்குமூலம்.!

Government school teacher murder...Double life sentence for boyfriend

இந்நிலையில், ஆனந்தின் நடவடிக்கை சரியில்லாததாலும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்தாலும் ஆனந்துடன் பழகுவதை கமருன்னிஷா நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் தனது நண்பரான பெரம்பலூர் எடத்தெருவை சேர்ந்த அரவிந்த்  (22) சேர்ந்து கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி காலை அல்லிநகரத்தில் இருந்து பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்ற கமருன்னிஷாவை வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினார். 

Government school teacher murder...Double life sentence for boyfriend

இதையும் படிங்க;- காதலனை நினைத்து கலங்கிய நந்தினி..காட்டுப்பகுதிக்கு வரழைத்து உல்லாசம்.. இறுதியில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கதி

இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த், அரவிந்த் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து ஆனந்த், அரவிந்த் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் மகிளா நீதிமன்ற நீதிபதி கிரி தீர்ப்பளித்தார். இதில் ஆனந்த், அரவிந்துக்கு கமருன்னிஷாவை கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆயுள் தண்டனையும், தலா ரூ.57,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து, போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;- உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. பொதுமக்களிடம் வசமாக சிக்கியது.. பிறகு நடந்த தரமான சம்பவம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios