Asianet News TamilAsianet News Tamil

ஒரு மணி நேரத்தில் 50 கோடி ரூபாய் நகை அபேஸ்... கண்டுபிடிக்க வந்த அர்ஜூனை காண்டாக்கிவிட்டு சென்ற குமபல்!!

திருச்சியில் லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்த கொள்ளை கும்பல்,தங்க, வைர நகை என சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold ornaments worth Rs 50 crore stolen from Trichy jewellery store
Author
Trichy, First Published Oct 2, 2019, 12:40 PM IST

திருச்சியில் லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் சுவரில் துளை போட்டு உள்ளே நுழைந்த கொள்ளை கும்பல்,தங்க, வைர நகை என சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் நேற்றிரவு வழக்கம் போல பணிகளை முடித்து விட்டு ஊழியர்கள் புறப்பட்டுச் சென்ற நிலையில், இரவில் வழக்கம் போல 6 செக்யூரிட்டி பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். காலையில் வழக்கம் போல மீண்டும் கடையை திறந்து பார்த்த போது,ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஷோ கேசில் இருந்த நகைகள் ஒரு கிராம் கூட விடாமல் துடைத்து வாரிச் சென்றுள்ளது அந்த கும்பல்.

Gold ornaments worth Rs 50 crore stolen from Trichy jewellery store

இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட மூத்த பல அதிகாரிகள்,கடையில் ஆய்வு நடத்தியதில், கடையின் மேற்கு பகுதியில் சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு ஓட்டை போட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.  

இச்சம்பவத்தில் வடமாநிலக் கொள்ளைக் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் கொள்ளை போனது சுமார் 50 கோடி ரூபாய் வரை இருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். லலிதா ஜூவல்லரியில் மொத்தம் 3 தளங்கள் உள்ள நிலையில் முதல் தளத்தில் உள்ள ஒட்டு மொத்த தங்க, வைர நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

Gold ornaments worth Rs 50 crore stolen from Trichy jewellery store

இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளிகளிடம்  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல அந்த வளாகம் மற்றும் கடைக்குள் இருக்கும் சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் மோப்ப நாய் மோப்பம் பிடிக்க முடியாத வகையில் கொள்ளையர்கள் வழியெங்கும் மிளகாய் பொடியை தூவிச் சென்றுள்ளது கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Gold ornaments worth Rs 50 crore stolen from Trichy jewellery store

கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, இரு கொள்ளையர்கள் முகமூடி அணிந்து உள்ளே சென்றிருப்பது தெரிய வந்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் கொள்ளை கும்பல் ஒன்றே முக்கால் மணி நேரம் வரை கடைக்குள் இருந்திருப்பதாகவும் போலீசார் தெரிகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios