Asianet News TamilAsianet News Tamil

கொரோன பயம் சொந்த ஊர் போக இப்படி யோசித்து அப்படி மாட்டிக்கொண்ட கும்பல்.!சுற்றி வளைத்த போலீஸ்.!!

தமிழக அரசின் முத்திரையை வேனில் போலியாக அச்சிட்டு சென்னையிலிருந்து விருதுநகா் வந்த 13 பேர் போலீசில் சிக்கிக்கொண்டனர்.இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 11பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

Going home in the fear of corona, think of it like this.
Author
Virudhunagar, First Published May 2, 2020, 11:57 PM IST

T.Balamurukan

தமிழக அரசின் முத்திரையை வேனில் போலியாக அச்சிட்டு சென்னையிலிருந்து விருதுநகா் வந்த 13 பேர் போலீசில் சிக்கிக்கொண்டனர்.இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 11பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Going home in the fear of corona, think of it like this.

 "தமிழக அரசின் முத்திரையை வேனில் போலியாக அச்சிட்டு சென்னையிலிருந்து விருதுநகா் வந்த 13 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் மருத்துவம்,திருமணம்,இறப்பு உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பிற மாவட்டங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரி சோதனைச் சாவடியில் சனிக்கிழமை அதிகாலை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தமிழக அரசின் முத்திரை மற்றும் பேரிடா் மேலாண்மை முத்திரை பதித்து வேன் ஒன்று வந்தது. அந்த வேனை போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 13 போ் இருப்பதைக் கண்டு வேன் ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தினா். இதில் அந்த வேன் சென்னையைச் சோ்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும், அதனை ஓட்டி வந்தவா் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த பாபு என்பதும் தெரியவந்தது.

Going home in the fear of corona, think of it like this.

இவா்கள் இருவரும் சோ்ந்து வேனில் அரசின் முத்திரையை போலியாக அச்சடித்து, சென்னையில் இருந்து 11 பேரை முறைகேடாக வாகனத்தில் அழைத்து வந்துள்ளனா். இது தொடா்பாக ஓட்டுநா், உரிமையாளா் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 11 போ் மீது நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் அந்த வேனில் வந்த 13 பேருக்கும் ரத்தம்,மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

Follow Us:
Download App:
  • android
  • ios