விருதுநகரில் கலெக்டர் அலுவலக ஊழியர் என ஏமாற்றி வேலைவாங்கி தருவதாக ஆசைக்காட்டி பெண்களை படுக்கைக்கு அழைத்த நபருக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சிங்கிள் பேக் மன்மதனை நடுரோட்டில் புரட்டி எடுத்த  சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது.

பெண்களின் அடி தாங்காமல் ஓடி வந்து நடு ரோட்டில் விழுந்த ஒருவனை, தூக்கி விட்டு அமரவைத்து தண்ணீர் கொடுத்து மீண்டும் கன்னம் பழுக்க பழுக்க பளார் விட்ட அறைகள் தான் பரபரப்பில் உச்சமாக அமைந்துள்ளது.

விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் தன்னை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவன், வேலைவாங்கி தருவதாக இளைஞர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்துள்ளான்.

பெண்களை வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக அழைத்து சென்று அழைக்கழித்துவிட்டும் வேலை வேண்டுமென்றால் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்து கட்டாயப்படுத்தி உள்ளார்.

சிலரை தனது செல்போனில் படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது. இவனது தொல்லைக்கு ஆளான பெண் ஒருவர், தனது தோழியிடம் விவரத்தை சொல்ல அந்த பெண்ணுக்கும் மன்மதன் செல் போனில் மெஸேஜ் அனுப்பியும், பஸ்டுக்கைக்கு வர சொல்லி பேசியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, சம்மதம் சொல்லி மன்மதனை வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். ஆசை ஆசையாய் மல்லியப்பூ, அல்வா வாங்கிக்கொண்டு வந்த அவனுக்காக காத்திருந்த பெண்கள், அவன் வந்ததும் ஓட ஓட விரட்டிஉருட்டுக்கட்டையால்  தாக்கினர், தகவல் அறிந்த அந்தபகுதி இளைஞர்களும் தங்கள் பங்கிற்கு கவனிக்க மனமதனுக்கு செம காட்டு காட்டப்பட்டது.

தப்பி ஓட முயன்ற அந்த மன்மதனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் போலீசார் வழக்கு ஏதும் போடாமல் விட்டு விட்டதாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அந்த நபரின் உண்மையான பெயரை கூட போலீசார் விசாரிக்கவில்லை என்பது தான் கொடுமை.

இத்தனைக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக சொல்லி பல பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட மன்மதனை, பெண்கள் துணிச்சலுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில் அவர் மீது சிறு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.