தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா கோவில்பத்து அண்ணா நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது 11 வயது மகள் கந்தர்வக் கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சரவணன் மனைவி புவனேஸ்வரி  ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.புவனேஸ்வரியின் தங்கை கணவர் கோபிநாத் .  இவர் பூதலூர் இந்திரா நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த  மாதம் 6 ஆம் தேதி சரவணன் மகள் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த கோபிநாத்  அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் . இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார். 

இதனால் அந்த மாணவி பயத்துடன் இருந்து வந்துள்ளார். பின்னர் மாணவி தன் தாயிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி இதுகுறித்து திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணமல்லி வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை தேடி வருகின்றனர்.

சொந்த சித்தப்பாவே அண்ணன் மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருவையாறு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.