பொள்ளாச்சியை தொடர்ந்து ஈரோட்டிலும் 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய ரியஸ் எஸ்டேட் அதிபர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த 21 வயது பெண், ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2015-ல் பி.எஸ்.சி. தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் ஈரோடு, வில்லரசம்பட்டியை சேர்ந்த, திருமணமாகி 2 குழந்தை உள்ள ராதாகிருஷ்ணன்(37) என்பவரிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இதனையடுத்து தனது பிறந்தநாளுக்கு விருந்து கொடுப்பதாக கல்லூரி மாணவியை ஏற்காட்டிற்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.

 

அப்போது ஆபாச படங்களை காட்டி  மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, அதனை செல்போனில் படம் எடுத்துள்ளார். பின்னர் அதை காட்டி இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டி அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து அவரை மிரட்டி ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே லாட்ஜில் அறை எடுத்து பல முறை பலாத்காரம் செய்துள்ளார். 

இதனால் கர்பமடைந்த கல்லூரி மாணவியை, காரில் வைத்து தாலி கட்டி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். பின்னர் மீண்டும் கடந்த ஜனவரி மாதம் அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவியை தனது நண்பர்களின் ஆசைக்கு இணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன  மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ரியல் எஸ்டேட் அதிபரான ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். 

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராதாகிருஷ்ணன் மேலும் சில கல்லூரி மாணவிகளை இதே போல பாலியல் தொல்லை கொடுத்து, சீரழித்தது தெரியவந்துள்ளது. இதனால் ராதாகிருஷ்ணன் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களை மிரட்டி உல்லாசமாக இருந்திருக்க கூடும் என்பதால் போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.