திருமணமாகாத  பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கைதான அப்பாவி இளைஞர் 90 நாட்களாக சிறையில் இருந்துள்ள நிலையில் மற்றொருவரை கைது செய்து விசாரிப்பதுடன் டிஎன்ஏ டெஸ்ட் நடத்த ஏற்பாடு நடக்கிறது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சில்லத்தூர் வெட்டிக்காட்டை சேர்ந்தவர் காவ்யா. திருமணமாகாத இவர் கர்ப்பமாக இருந்ததை அவரது பெற்றோர் கண்டுபிடித்தனர். இதற்கு காரணம் யார் என்று கேட்டதற்கு, அதே ஊரில்,வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஆனந்தராஜ் என்பவர் தான் காரணம் என சொல்ல , அவரோ நான் காரணமில்லையென மறுத்தார். ஆனாலும் மஞ்சுளா புகார் அளித்ததன் அடிப்படையில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் ஆனந்தராஜை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, மஞ்சுளாவுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு யார் தந்தை என்பதை நிரூபிக்க டிஎன்ஏ டெஸ்ட் நடத்தப்பட்டது. இதற்காக குழந்தையின் ரத்தமும், ஆனந்தராஜின் ரத்தமும் பரிசோதனை செய்யப்பட்ட போது குழந்தைக்கு தந்தை ஆனந்தராஜ் இல்லை என்பது உறுதியானதால் 90 நாள் சிறையில் இருந்த ஆனந்தராஜ் வெளியே வந்தார். 

மீண்டும் காவியாவை பிடித்து விசாரணை நடத்தியதில் தனது குழந்தைக்கு தந்தை பாச்சூரை சேர்ந்த பால்ராஜ் என்று கூறினார். ஏற்கனவே கல்யாணமாகி 2 குழந்தைக்கு தந்தையாவார். 

காவியாவை காதலித்து, ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்த அவர், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று கூறியதால் ஆனந்தராஜை கூறிவிட்டதாக மஞ்சுளா கூறியுள்ளார். அதன்பேரில் பால்ராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பால்ராஜிக்கும் டிஎன்ஏ சோதனை நடத்த ஏற்பாடு நடக்கிறது.