முத்தம் கொடுக்க என்னை விடவே இல்லை,  அதான் கீழே தள்ளி விட்டேன் அவ செத்துட்டா  என்று பள்ளி ப்ளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர் பகீர் வாக்குமூலம் தந்துள்ளார். 

மத்திய பிரதேசத்தின் ஜாபல்பூர் பகுதியை சேர்ந்த மாணவி பிங்கி. இவருக்கு வயது 18. அங்குள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர், தன்னுடைய ஆண் நண்பருடன் கடந்த வாரம் வியாழக் கிழமை, பிஜாபுரி கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். ஆனால் அதற்கு பின் வீட்டிற்கு திரும்பி வரவில்லை, இதனால் பதட்டமும், பயமும் அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் மாணவியை தேடி பார்த்தும், கடைசியில் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் போலீசாரும் மாணவியை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாணவியின் சடலம் அந்த காட்டுப்பகுதிக்குள் கிடந்ததை போலீசார் கண்டெடுத்தனர். இறந்து நாற்றம் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடலில் மாணவிக்கு காயம் இருந்தது. அதுமட்டுமல்ல, தலையின் பின்பக்கம் பயங்கரமாக அடிபட்டு ரத்தம் கசிந்துள்ளது.

உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது தான் அந்த மாணவி அவரின் ஆண் நண்பர் ராமன் சிங் சயான் என்பவர் சிக்கினார். இவருடன்தான் மாணவி காட்டுப் பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு யாருமில்லாத தனிமையை பயன்படுத்தி கொண்ட ராமன் சிங் சயான் கற்பழிக்மம் முயற்சியில் இறங்கிய அவர் அப்போது மாணவியிக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார்.

ஆனால், மாணவி அதை தடுத்து, மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமன் சிங், மாணவியை கீழே பின்பக்கமாக கீழே தள்ளிவிட்டுள்ளார். கீழே விழுந்த அவர் இங்கிருந்த கல்லில் பட்டு  ஒரு பெரிய கல்லில் பட்டு பலத்த காயமடைந்து, அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது ஆன் நண்பர் ராமன் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.