புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் விரக்தியில் தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பார்ப்பவர்களை கண்ணீர் விட்டு அழவைத்துள்ளது.

மயிலாடுதுறை அருகே வடமட்டம் பஜனை மடம் தெருவைச் சேர்ந்த அப்துல் ஹாரிப். ஹாரிப் துபாயில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிலோபர் பர்வீன் என்கிற பெண்ணுடன் கல்யாணம் நடந்தது. இருவருக்கும் அப்ரினா, அப்ரா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் அப்துல் ஹாரிப் வெளிநாட்டில் இருப்பதால் தனது மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் பர்வீன்.

பர்வீன்க்கு அடிக்கடி உடல் நல குறைவு ஏற்படுவதை  மருத்துவமனையில் பரிசோதித்த நிலோபர் பர்வீன் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர். நாளுக்கு நாள் புற்றுநோய் தாக்கம் அதிகமானதை கண்டு கலங்கிப்போயுள்ளார்.  மனம் உடைந்த பர்வீன் தனது வீட்டின் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்ட பர்வீன் தனது 2 குழந்தைகளுக்கும் விஷத்தைக் கொடுத்துக் கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து மயக்கமடைந்தார்.

கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பர்வீனின்  மாமியார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது பர்வீனும், 2 குழந்தைகளும் பரிதாபமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த பாலையூர் போலீசார் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவன் வெளிநாட்டில் இருக்கும் சூழலில், தனது இரண்டு குழந்தையையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் மட்டுமில்லாமல், கேட்பவரையும் கலங்கி அழவைத்துள்ளது.