மகாநதி படத்தில் வருவது போல பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட சிறுமிகளை கடத்தி விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கமல் ஹாசன் நடிப்பில் மகாநதி படம் வெளியானபோது இப்படியும் நடக்குமா? பாலியல் தொழிலுக்காக சிருமிகளை கடத்துவார்களா? என்று அதிர்ச்சியடைந்தவர்கள் ஏராளம். தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீஹாரிலிருந்து 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் காணாமல் போயுள்ளார். 

இதுகுறித்து பாட்னா போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மணீஷா குமாரி என்ற இளம்பெண்னை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனிடையே, தெலங்கானா மாநிலத்திலிருந்து, பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்த பெண் போலீசாருக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதுதொடர்பான விசாரணையில் அந்தப் பெண்தான் மணீஷா குமாரி என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்தப் பெண் பிரகாஷ் யாதவ் என்பவனிடம் வெறும் 400 ரூபாய்க்கு விற்றது அம்பலமானது.  தொடர்ந்து பாட்னா போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சென்னை பெரம்பூர் பகுதியில் தங்கியிருந்த பிரகாஷ் யாதவை அதிரடியாக சுற்றி வளைத்தது. அவனிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்த இளம் பெண்ணை அன்சாரி என்பவனிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அன்சாரி அதன் பின் சிறுமியை என்ன செய்தான் என்பது பற்றியும், அவன் எங்கு உள்ளான் என்பது பற்றியும் தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளான்.

அன்சாரியை தேடி வந்த பீஹார் போலீஸ் பீகாரில் உள்ள சிறுமியின் தந்தைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து கடத்தப்பட்ட சிறுமி பீகாரிலேயே இருப்பதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்தச் சிறுமியை பாலியல் தொழிலுக்கு விலை பேசி விற்கவுள்ளதாகவும் மிரட்டியுள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மிரட்டல் வந்த தொலைபேசி ஆய்வு செய்தபோது ஆராய்ந்தபோது அந்த எண் அன்சாரிக்கு சொந்தமானது என்பதும், அந்த எண்ணில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் குடியிருக்கும் பீகாரைச் சேர்ந்த ரஜியா என்ற ஆசாமிக்கு அடிக்கடி லைன் போனதும் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பீகார் மற்றும் தமிழக போலீசார் ரஜியா வீட்டுக்குச் சென்றபோது அங்கிருந்த சிறுமியை மீட்டனர். ரஜியாவைக் கைது செய்து பீகார் அழைத்துச் சென்ற போலீசார், சிறுமி கடத்தல் தொடர்பாக தலைமறைவாக இருந்த அன்சாரி உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட அன்சாரியும் ரஜியாவும் கணவன் மனைவி என்பதை போலீசார் கண்டறிந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்து சிறுமியை தனது மனைவியிடம் அன்சாரி விட்டுச் சென்றுள்ளான்.  மேற்கண்ட கும்பல் மிகப் பெரிய நெட்வொர்க் மூலம் பள்ளிச் சிறுமிகளை கடத்தி பல ஆண்டுகளாக பாலியல் தொழிலுக்கு விற்றுவந்தது அம்பலமாகியுள்ளது.