சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த பெண், லேப் டெக்னிக் படித்துவிட்டு வேலைக்காகக் காத்திருந்தார். அப்போது, அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள தனியார் அலுவலகத்தில் அவருக்கு டெலிகாலர் வேலை கிடைத்தது. சந்தோஷத்துடன் வேலைக்குச் சென்ற அந்த பெண், அலுவலகத்தை நடத்திய ராஜேஷின் கல்யாணம் செய்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்ததும், 3 மாதத்துக்குப் பிறகு சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர். அவரிடம் ராஜேஷ் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல் முதலாக டெலிகாலராக ராஜேஷ் அலுவலகத்துக்குச் சென்ற அந்த பெண்ணை பார்த்தவுடன், கல்யாணம் செய்ய விரும்பிய ராஜேஷ் , அதைச் சிறுமியிடம் கூறியுள்ளார். இதற்காக அந்த பெண்ணையும் பல இடங்களுக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார். இந்தச் சமயத்தில் கடந்த ஜூலை 30-ம் தேதி அந்த பெண்ணுக்கு போன் செய்த ராஜேஷ், தனக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார். அதை நம்பிய அந்த பெண் ராஜேஷ் சொன்ன இடத்துக்குச் சென்றுள்ளார். உடனடியாக பெண்ணுடன் ஏற்கெனவே எடுத்த போட்டோக்களை கட்டி மிரட்டிய ராஜேஷ், தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் அந்த பெண்ணை கொண்டு வந்துள்ளார்.

பிறகு, காரை பெங்களூருக்குக் கொண்டு செல்ல டிரைவர் ஒருவரை ஏற்பாடு செய்துள்ளார். சிறுமியும் அவரும் பெங்களூருக்கு விமானத்தில் சென்றுள்ளனர். அங்கு ஸ்டார் ஹோட்டலில் அறை எடுத்த ராஜேஷ் சிறுமிக்கு தாலி கட்டியுள்ளார். பிறகு, அங்கிருந்து ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று அங்கும் ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்க வைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார் . சிறுமி யாருடனும் பேசாமலிருக்க வைத்துள்ளார். பணம் செலவானதும் மதுரைக்கு இருவரும் வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக அந்த பெண்ணை மிரட்டியே உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.  மேலும் ராஜேஷால் தான் அனுபவித்த கொடுமைகளை அந்த பெண் கண்ணீர்மல்க கூறியுள்ளார்.