கணவருடன் சொந்தக்காரர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற புதுப்பெண் சுகந்தி, லெஸ்பியன் மோகத்தால் கல்லூரி தோழியுடன் எஸ்கேப் ஆன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, கடந்த வாரம்  திருமணம் நடந்து முடிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தனது கணவருடன் விருந்து நிகழ்ச்சிக்காக பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த புது கல்யாணம் ஆன இளம்பெண் சுகந்தி, கல்லூரி சான்றிதழ் வாங்கி விட்டு வருவதாக வீட்டில் சொல்லி விட்டு வெளியே சென்றார். ஆனால், அவர் திரும்பி வரவில்லை. இரவு முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை, இதனையடுத்து கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது கல்லூரிக்கே வரவில்லை என தெரிவித்தனர். இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சக தோழிகளிடம் விசாரித்தபோது ஏற்கனவே தன்னுடன் கல்லூரியில் பயின்ற தோழி சகுந்தலா என்ற பெண்ணுடன், இந்த புதுமண இளம்பெண் நெருக்கமான உறவு, அதாவது லெஸ்பியன்னாக உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த தோழி குறித்து விசாரித்தனர். அப்போது அவர் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இருப்பது தெரியவந்தது. எனவே அந்த தோழியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த அவரின் பெற்றோர், எனது மகள் சென்னையில் உள்ளார் என தெரிவித்தனர். அவரது மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்துக்கு முன்பே இளம்பெண்ணுக்கும், தோழிக்கும் லெஸ்பியன் உறவு இருந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், இளம்பெண்ணுக்கு திருமணம் முடிந்த பின் முதலிரவில் கணவரின் ஆசைக்கு இணங்க வில்லை என்பதும். கணவர் தன்னை தொடுவதற்கு கூட அனுமதிக்க வில்லையாம். புதிய இடம் என்பதால் இளம் பெண் சுகந்தி  பதற்றமாக இருப்பதாக கணவர் நினைத்துக் கொண்டார். ஆனால் தோழியுடன் மாயமான தகவலை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். தற்போது மாயமான இளம்பெண் சுகந்தியும், தோழி சகுந்தலாவும் சென்னையில் ஒன்றாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.  இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை சென்றுள்ளனர்.