பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவருக்கு பாதிக்கப்பட்ட இளம்பெண் நூதன முறையில் வெறித்தனமாக தண்டனை கொடுத்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரியில், அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு,  நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்த வந்த நிலையில் ஒரு பெண் மடக்கிப்பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து அதை தனது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் பரவவிட்டதன் மூலம் இந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

கல்லூரி படிப்பை முடித்த இளம்பெண் ரமாதேவி, அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர். நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த பெண் ரமாதேவி துணிச்சலுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை தட்டிக் கேட்கும் விதமாகவும், தானே தண்டனை வழங்கும் வகையிலும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் ஆச்சர்யத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளார்.

இளம்பெண் ரமா தேவி  வீடு இருக்கும் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் கார்த்திகேயன் என்பவர், அந்த பகுதியில் மொத்தமாக பழங்களை வாங்கி வைக்க தென்னை கூரையால் ஆன குடோனும் அமைத்து உள்ளார். குடோனுக்கு பழங்களை எடுக்கச் செல்லும்போது அந்த பெண் ரமா தேவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி போலீசில் புகார் செய்தால் அவருக்கு உடனடியாக தண்டனை கிடைக்காது என்பதால் தானே அவருக்கு தண்டனை வழங்க முடிவு செய்த அந்த பெண்.

பழ வியாபாரி பழ குடோனுக்கு வரும்போது செல்போன் வைத்துக்கொண்டு தயாராக காத்திருந்தார். பழ வியாபாரி வந்ததும் தனது செல்போனில் அவரை வீடியோ எடுத்தபடி சரமாரியாக குத்து குத்துன்னு குத்துகிறார். இதை எதிர்பார்க்காத அந்த வாலிபர் அதிர்ச்சியடைந்து அந்த பெண்ணை எதிர்க்கிறார். ஆனால் கோபத்தின் உச்சியில் இருந்த பெண்ணின் வெறித்தனமாக தாக்குகிறார், அந்த பெண்ணின் அடி தாங்க தாங்க முடியாமல் தெறித்து ஒடுங்கிவிடுகிறார்.

ஆனாலும், ஓடி பிடித்து அந்த வாலிபரை தாக்கியபடி அந்த பெண் அசிங்க அசிங்கமாக பேசும் வார்த்தைகள் பயங்கரமாக இருந்துள்ளது. தான் செய்த தவறை அந்த வாலிபர் உணரும் அளவுக்கு திட்டித் தீர்க்கிறார். வலி தாங்க முடியாத கார்த்திகேயன் தன்னை அடித்தால் செத்துவிடுவேன் என்று மிரட்டிப் பார்க்கிறார். ஆனால், அதற்கு அசராத பெண் செத்து தொலை என்று சொல்லிக்கொண்டே வெளுத்து வாங்குகிறார்.

எனது உறவினர்களுக்கு தெரிந்தால் உன்னை அடித்தே கொன்று விடுவார்கள். ஆனாலும் நானே உனக்கு  தண்டனை கொடுத்தால் தான் எனது ஆத்திரம் அடங்கும் என்று சொல்லியபடி ஆத்திரம் தீரும் வரை ஆதி அடின்னு அடித்து வீழ்த்துவிட்டார்.  பெண்ணின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக பழ குடோனின் ஓலை கூரையை பிய்த்து கொண்டு அந்த வாலிபர் தப்பி ஓடுகிறார். 

இந்த வீடியோ வெளியான பிறகு பழ வியாபாரி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர் அவமானத்திற்கு பயந்து நெல்லைக்கு தப்பித்து ஓடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த பரபரப்பு வீடியோ போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கும் சென்றுள்ளதால் அவர்கள் அது பற்றி விசாரிக்க உத்தரவிட்டு உள்ளனர். 6 நிமிடம் 7 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ குமரி மாவட்டம் முழுவதும் பலரது செல்போன்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த பெண்ணின் துணிச்சலான செயல், இதுபோல தவறு செய்ய நினைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கத் தோன்றும் வகையில் உள்ளது.