செஞ்சி அருகே பெண்களை மயக்கி மலைப்பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்த பின் அதனை வீடியோ எடுத்து வைக்கும் விநோத பழக்கம் கொண்ட கொடூர கொலையாளியை காவல் தறையினர் கைது செய்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமத்தை சேர்ந்தவர் குட்டியம்மாள். ஆடு மேய்க்க சென்ற இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாயமானார். பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில், அவரை கடைசியாக உறவினரான தேவேந்தின் என்ற இளைஞருடன் பார்த்ததாக கூறியுள்ளனர்.  

இதனையடுத்து தேவேந்திரன் வீட்டிற்கு சென்ற குட்டியம்மாளின் மகன் தனது தாய் குறித்து விசாரித்துள்ளார். அப்போது தேவேந்திரனின் மனைவி கொடுத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனைவி இருக்கும் நிலையில் பிற பெண்களை காதல் வலையில் விழவைத்து, அவர்களுடன் நெருக்கமாக இருந்துவிட்டு, பின்னர் அவர்களை மலைப் பகுதிக்கு அழைத்துச்சென்று கொலை செய்து அதை வீடியோ எடுத்து பார்த்து ரசிக்கும் கொடூர புத்திக்கொண்டவர் என்று கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக 2 வருடங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் மாயமான சுமதி என்ற பெண் எப்படி கொல்லப்பட்டார் என்பது தொடர்பான வீடியோவையும் அவரிடம் காண்பித்துள்ளார்.   

அந்த வீடியோவில் கை, கால்கள் கட்டப்பட்டு, கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் குப்புற இறந்துகிடக்க, எதற்காக அந்தப் பெண்ணைக் கொலைசெய்தேன் என்று வீடியோவில் பேசுகிறான் தேவேந்திரன். இந்த வீடியோவை கைப்பற்றிய குட்டியம்மாளின் மகன் தனது தாய்க்கும் இதுபோல நடத்திருக்குமோ என்று அஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அப்போது மேல்மலையனூர் செல்லும் வழியில் உள்ள கூழாங்கல் மலையில் தேடி பார்த்த போது அங்கு அழுகிய நிலையில் குட்டியாம்மாளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து தேவேந்தினை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. தேவேந்தின் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்றொரு மலையில் இருந்து சுமதியின் எலும்பு பாகங்களை போலீசார் கைப்பற்றினர்.  

இதையடுத்து தேவேந்திரன், எனக்கும் சுமதிக்கும் இருந்த தொடர்பு என் மனைவிக்குத் தெரிந்துவிட்டது. அதனால், கோபித்துக்கொண்டு அவள் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டாள். அதையடுத்து சுமதியிடம் பேசுவதையும், அவரைச் சந்திப்பதையும் நிறுத்திவிட்டேன். ஆனால், என்னை மறக்க முடியவில்லை என்றும் அடிக்கடி என்னைச் சந்திக்க வேண்டும் என்றும் தொடர்ந்து நச்சரித்துக்கொண்டிருந்தார். இதைனயடுத்து மழைப்பகுதிக்கு அழைத்து சென்று கயிற்றால் நெறித்து கொலை செய்துவிட்டு அதை வீடியோவாக பதிவு செய்து மனைவியிடம் இந்த வீடியோ ஆதாரத்தை கொடுத்துள்ளான். 

அதேபோல அத்தை உறவை கொண்ட குட்டியாம்மாளுடன் நெருங்கி பழகியதை காரணம் காட்டி ஆத்திரமடைந்ததால் மனைவி சமாதானம் படுத்தும் நோக்கில் குட்டியம்மாளை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். தேவேந்திரனின் இவர்களை தவிர வேறுயாராவது கொலை செய்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.