Asianet News TamilAsianet News Tamil

#BREAKING சென்னையில் பயங்கரம்.. காவல் உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி சிடி மணி.. சுற்றிவளைத்து கைது.!

சென்னை காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனை பிரபல ரவுடி சிடி மணி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Gangster CD Mani arrested in chennai
Author
Chennai, First Published Jun 2, 2021, 5:16 PM IST

சென்னை காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனை பிரபல ரவுடி சிடி மணி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிடி மணி. இவர் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளில் சிடி விற்பனை செய்து வந்ததால் சிடி மணி என்று அழைக்கப்பட்டார். நாளடைவில் பிரபல ரவுடியாக உருவெடுத்தார். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் இருப்பதால் இவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 

Gangster CD Mani arrested in chennai

குறிப்பாக தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே கடந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி மாலை 4 மணி அளவில் நாட்டு வெடிகுண்டு வீசி சி.டி.மணியை கொல்ல முயற்சி செய்தனர். அதில் அதிர்ஷ்டவசமாக அவன் உயிர் தப்பினான். இந்த விவகாரத்தில் 4 பேர் சரணடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாகவும் சிடி மணி தேடிவந்தனர். 

Gangster CD Mani arrested in chennai

இந்நிலையில், முக்கியமான கொலை வழக்கில் அவரை தேடி வரும் போது நாவலூரில் இருக்கும் அவரது வீட்டில் அதிரடியான நுழைந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, நடந்த சண்டையின் போது  உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் என்பவரை சிடி மணி துப்பாக்கியால் சுட்டத்தில் காலில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். இதனையடுத்து, காவல்துறையினருக்கும் ரவுடிக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டதையடுத்து சிடி மணியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தற்போது, குண்டுபாய்ந்து காயமடைந்த  உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios