Asianet News TamilAsianet News Tamil

பணம் பறிக்கிறதுக்கு எப்படி எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க.. நூதனமாக பணம் பறித்த கும்பல் கைது

புதுச்சேரியில் செல்போஃன் செயிலி மூலம் வாலிபர்களிடம் ஆபாசமாக பேசி அவர்களை தனிமையில் வரவழைத்து பணம் பறிப்பில் ஈடுப்பட்ட மூன்று பட்டதாரி இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

gang that extorted money from the youth by threatening them with a knife was arrested
Author
First Published Sep 22, 2022, 3:57 PM IST

புதுச்சேரியில் செல்போஃன் செயிலி மூலம் வாலிபர்களிடம் ஆபாசமாக பேசி அவர்களை தனிமையில் வரவழைத்து பணம் பறிப்பில் ஈடுப்பட்ட மூன்று பட்டதாரி இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (27). இவர் வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு புதுச்சேரி அருகில் உறுவையாரு சாலையில் இவரிடம் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 400 பணம் மற்றும் ஏ.டி.எம் கார்ட்டை பறித்து கொண்டு அதில் இருந்த ரூ.8 ஆயிரம் எடுத்து சென்றதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் கொடுத்துள்ளார். 

gang that extorted money from the youth by threatening them with a knife was arrested

இதனையடுத்து அவர்கள் மங்கலம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலீசார் தீபனிடம் நடத்திய விசாரணையில் "கிண்டர் கே சாட்" என்கிற செயலி மூலம் சிலர் அவரிடம் ஆபாசமாக பேசி வந்த நிலையில், அவரை தனிமைக்கு அழைத்ததாகவும், முதலில் தாம் வர மறுத்ததால் அவர்கள் அவரின் நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியதால், அவர்களின் அழைப்பின் பேரில்  வில்லியனூர் உருவையாறு சாலை சுடுகாடு அருகே சென்றுள்ளார். 

அப்போது, மூககவசம் அனிந்தவாரு வந்த 4 பேர் கொண்ட கும்பல் தன்னை மிரட்டி பண பறிப்பில் ஈடுப்பட்டதாக தெரிவித்ததை அடுத்து ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதில் பணம் எடுத்து வரும் ஒருவரை அடையாளம் கண்டதில், அவர் வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமு என தெரியவந்ததை அடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் செயிலி மூலம் அவருடன் சேர்ந்து பண பறிப்பில் ஈடுப்பட்டது.

gang that extorted money from the youth by threatening them with a knife was arrested

அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார், முகிலன் மற்றும் பிரகாஷ் என அவர் தெரிவித்தை அடுத்து விஜயகுமார், முகிலன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் பணம் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்ததனர். பின்னர், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவர்கள் இந்த செயிலி மூலம் வேறு யார் யாரிடம் இது போன்று பண பறிப்பில் ஈடுப்பட்டுள்ளனர் என்று சைஃபர் க்ரைம் போலீசார் உதவியுடன் மங்களம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios