நீலகிரியில் தனியாக பள்ளிக்கு சென்ற மாணவியை காரில் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் போக்சோவில் சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி அருகே உள்ள தும்பிமலையை சேர்ந்தவர் முரளி (26). இவரது நண்பர் கோகுல்ராஜ் (28). இவர்கள் 2 பேரும் காரில் சோலூர் மட்டம் வழியாக சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக 15 வயது மாணவி ஒருவர் தனியாக பள்ளிக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, பள்ளி மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார்.

பின்னர் அவரை வாயை பொத்தி காரில் கடத்தி கோவைக்கு அழைத்து வந்தனர். ஆனால், வரும் வழியிலேயே அந்த மாணவியை மாறி மாறி காரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து, கோவை வந்ததும் ஒரு தங்கும் விடுதிக்கு மாணவியை மிரட்டி அழைத்து சென்றனர். பின்னர், அங்கு இரவு முழுவதும் அந்த மாணவியை மிரட்டி 2 பேரும் ஆசைத்தீர பலாத்காரம் செய்தனர். பின்னர் மறுநாள் காலை மாணவியை காரில் இறக்கி விட்டு விட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து, வீட்டிற்கு வந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கதறியபடி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசடிவி காட்சிகளின் அப்படிடையில் முரளி மற்றும் கோகுல்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.