இளம்பெண்ணை காதலித்து தனிமையில் உல்லாசம் அனுபவித்துவிட்டு, கர்ப்பமாக்கி கைவிட்ட காதலனின் வீட்டின் முன் பச்சிளம் குழந்தையை போட்டு சென்ற பெண்ணாய் கண்டுபிடித்து, அவரை ஏமாற்றிய காதலனையும் போலீசார் கைது செய்தனர்.  

பால்கர் மாவட்டம் பட்கா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் ஷிண்டே, சம்பவத்தன்று இவரது வீட்டு திண்ணையில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று போர்வையால் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது. இதை கண்ட ரமேஷ் உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். மேலும், இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், அக்குழந்தையை வீட்டு திண்ணையில் போட்டுவிட்டு சென்ற பெண் பெயர் சரிகா என்பது தெரியவந்தது. சரிகாவும், ரமேஷ் ஷிண்டேவின் மகன் ராகுலும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இதனால் கல்யாணம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டு உள்ளனர். இதற்கு அவர்களது பெற்றோர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். ஆனாலும், இவர்கள் காதலித்தும் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். பிறகு தனிமையிலும் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சரிகா கர்ப்பமானார். மேலும் ராகுலும் சரிகாவை பெண்ணை கைவிட்டார். காதலனும் கைவிட்டதால் சரிகா வான்காவில் வசித்து வரும் தங்கை வீட்டில் தங்கி வசித்து வந்தார். சரிகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்து பெண் குழந்தையை பெற்று எடுத்தார்.

பின்னர் பிறந்த பெண் குழந்தையை சரிகா மற்றும் அவரது சகோதரி கல்யாணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் ராகுலின் வீட்டு திண்ணையில் விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெண்ணை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியதாக ராகுல் மற்றும் குழந்தையை விட்டு சென்ற சரிகா மற்றும் அவரது சகோதரியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.